ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில், முன்ஜாமீன் மனுக்‍கள் தள்ளுபடி - டெல்லி வீட்டில் ப.சிதம்பரம் இல்லாததால், ஏமாற்றத்துடன் திரும்பிய சி.பி.ஐ அதிகாரிகள்

Aug 20 2019 8:15PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் திரு. ப.சிதம்பரத்தின் முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதையடுத்து, அவரை கைது செய்ய டெல்லியில் உள்ள அவரது வீட்டை சி.பி.ஐ. அதிகாரிகளும்,அமலாக்கத்துறை அதிகாரிகளும் முற்றுகையிட்டனர்.

கடந்த 2006-ம் ஆண்டு திரு.ப.சிதம்பரம் மத்திய நிதி அமைச்சராக இருந்தபோது, ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு, வெளிநாடுகளில் இருந்து 305 கோடி ரூபாய் அன்னிய முதலீடுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்த நிலையில், ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனம் இதற்கு உதவியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. கடந்த 2017ம் ஆண்டில் குற்றப்பத்திரிக்‍கை தாக்‍கல் செய்தன.

குற்றப்பத்திரிக்‍கையில், ப.சிதம்பரத்தின் பெயர் இல்லாததையடுத்து, அவரை காவலில் எடுத்து விசாரிக்‍க, சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் அனுமதி கோரின. இதையடுத்து, தான் கைது செய்யப்படலாம் என்பதால், சிதம்பரம் தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமின் கோரி மனுக்‍கள் தாக்‍கல் செய்யப்பட்டன. சிதம்பரத்தின் முன்ஜாமின் மனுக்‍களை இன்று தள்ளுபடி செய்த நீதிமன்றம், மேல் முறையீடு செய்ய 3 நாட்கள் அவகாசம் வழங்கியது. இதனை எதிர்த்து ப.சிதம்பரம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ள நிலையில், மாலை, டெல்லியிலுள்ள அவரது வீட்டை சி.பி.ஐ. அதிகாரிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சிதம்பரம் வீட்டில் இல்லாததால் அதிகாரிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இதனை தொடர்ந்து அமலாகத்துறை அதிகாரிகளும் ப.சிதம்பரம் வீட்டிற்கு வந்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00