ஸ்ரீ்நகர் விமானநிலையத்தில் குலாம் நபி ஆசாத் தடுத்து நிறுத்தம் - மத்திய அரசு சர்வாதிகாரமாக செயல்படுவதாக குற்றச்சாட்டு

Aug 20 2019 8:06PM
எழுத்தின் அளவு: அ + அ -
காஷ்மீருக்கு சென்ற முன்னாள் முதலமைச்சர் குலாம் நபி ஆசாத் ஸ்ரீ்நகர் விமானநிலையத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டார். மத்திய அரசு சர்வாதிகாரமாக செயல்படுவதாக அவர் குற்றம்சாட்டிள்ளார்.

காஷ்மீர் மாநிலத்தின் சிறப்புச்சட்டம் 370-ஐ ரத்து செய்த மத்திய அரசு அம்மாநிலத்தை காஷ்மீர், லடாக் என மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் நிர்வகிக்கப்படும் இரண்டு யூனியன் பிரதேசங்களாக அறிவித்தது. இதனை தொடர்ந்து கஷ்மீர் மாநிலம் முழுவதும் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டு பொதுமக்கள் நடமாட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டது. அம்மாநில முன்னாள் முதலமைச்சர்களான பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்ட காஷ்மீர் அரசியல் கட்சி தலைவர்கள் வீட்டுச் சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அம்மாநில மக்களுக்கு ஆதரவு தெரிவிக்க சென்ற இடதுசாரி கட்சி தலைவர்கள் சீதாராம் யெச்சூரி, டி.ராஜா ஆகியோர் ஸ்ரீ்நகரில் விமான நிலையத்திலேயே கைது செய்யப்பட்டு டெல்லிக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். இந்நிலையில் இன்று காஷ்மீர் சென்ற அம்மாநில முன்னாள் முதலமைச்சரும், மாநிலங்களவை எதிர்கட்சி தலைவருமான குலாம் நபி ஆசாத்தும் ஸ்ரீ்நிகர் விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்டு டெல்லிக்கு திருப்பி அனுப்பப்பட்டார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்த குலாம் நபி ஆசாத், மத்திய அரசு ஜனநாயக முறையில் செயல்படவில்லை என்றும், காஷ்மீர் மக்களை சந்திக்க எதிர்கட்சி தலைவர்கள் செல்லவில்லை என்றால் வேறு யார்செல்வது என்று கேள்வி எழுப்பியதுடன், இது மத்திய அரசின் அராஜகத்தையே வெளிப்படுத்துவதாக குற்றம்சாட்டினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00