உத்தரகண்டில் நிவாரணப் பொருட்களை கொண்டு சென்ற ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 3 பேர் உயிரிழப்பு

Aug 21 2019 3:36PM
எழுத்தின் அளவு: அ + அ -
உத்தரகாண்ட் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால் ஹெலிகாப்டர்கள் மூலம் பொதுமக்களுக்கு நிவாரணப் பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன. அந்தவகையில், உத்தரகாசி மாவட்டம் மோரி பகுதியில் இருந்து இன்று காலை மோல்டி பகுதிக்கு ஹெலிகாப்டரில் நிவாரணப் பொருட்கள் கொண்டு செல்லப்பட்டன. மோல்டியை நெருங்கியபோது மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது. ஹெலிகாப்டரில் பயணம் செய்த பைலட், துணை பைலட் மற்றும் உள்ளூர் நபர் ஒருவர் ஆகியோர் இந்த விபத்தில் மரணமடைந்தனர். விபத்து நடைபெற்ற பகுதியில் மீட்பு பணிகளை மேற்கொள்வதற்காக 10 பேர் அடங்கிய குழு விரைந்துள்ளது. இதற்கிடையே விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 15 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும் என உத்தரகண்ட் முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத் அறிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00