முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி காலமானார் - டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது

Aug 24 2019 4:35PM
எழுத்தின் அளவு: அ + அ -
உடல்நலக்‍குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்‍கப்பட்டிருந்த முன்னாள் மத்திய நிதி அமைச்சர் திரு. அருண் ஜேட்லி சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். அவருக்‍கு வயது 66.

கடந்த ஆண்டு மே மாதம் சிறுநீரக மாற்று சிகிச்சை செய்து கொண்ட திரு. அருண் ஜேட்லி, தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தார். நடந்து முடிந்த மக்‍களவை தேர்தலிலும் போட்டியிடவில்லை.

திடீர் உடல்நலக்‍ குறைவு காரணமாக திரு. ஜேட்லி, கடந்த 9ம் தேதி, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்‍கப்பட்டார். பல்துறை மருத்துவர்கள் குழு, அவருக்‍கு, சிகிச்சை அளித்து வருவதாக தெரிவிக்கப்பட்டது.

அவரை, குடியரசுத் தலைவர் திரு. ராம்நாத் கோவிந்த், பிரதமர் திரு. மோடி, மத்திய அமைச்சர்கள், பா.ஜ.க. முக்‍கிய தலைவர்கள் உள்ளிட்டோர் கடந்த வாரம் நேரில் சென்று பார்த்தனர்.

அருண் ஜேட்லியின் இதயம் மற்றும் நுரையீரல் சரியாக செயல்படவில்லை என்றும், செயற்கை சுவாச கருவி உதவியுடன், தீவிர சிகிச்சை அளிக்‍கப்பட்டு வருவதாகவும், தகவல் வெளியாகியது.

அவரது உடல்நிலை மோசமடைந்து, கவலைக்கிடமாக இருப்பதாக நேற்று இரவு எய்ம்ஸ் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்நிலையில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று ஜேட்லியின் உயிர் பிரிந்தது. அவரது மறைவுக்‍கு பல்வேறு அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00