நடப்பு நிதியாண்டில் இதுவரை 2 ஆயிரத்து 480 வங்கி மோசடி வழக்குகள் பதிவு - ரிசர்வ் வங்கி தகவல்

Sep 10 2019 1:43PM
எழுத்தின் அளவு: அ + அ -
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் மட்டும், வங்கி மோசடிகள் தொடர்பாக 2 ஆயிரத்து 480 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

சமூக ஆர்வலர் சந்திரசேகர் கவுட் என்பவர், வங்கி மோசடிகள் குறித்த தகவல்களை அளிக்கும்படி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், ரிசர்வ் வங்கியிடம் கோரிக்கை விடுத்திருந்தார். அதன்படி ரிசர்வ் வங்கி அளித்துள்ள தகவல் அறிக்கையில், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் மட்டும், 18 பொதுத்துறை வங்கிகளில், மோசடி தொடர்பாக 2 ஆயிரத்து 480 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்‍கப்பட்டுள்ளது.

இந்த வழக்குகளில் 31 ஆயிரத்து 898 கோடி ரூபாய் மோசடி நடைபெற்றதாகவும், பாரத ஸ்டேட் வங்கியில், 12 ஆயிரத்து 12 கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதாகவும், அது தொடர்பாக ஆயிரத்து 197 மோசடி வழக்குகள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்‍கப்பட்டுள்ளது.

அலகாபாத் வங்கியில் 2 ஆயிரத்து 855 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக 381 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் 2 ஆயிரத்து 526 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடைபெற்றதாகவும், இது தொடர்பாக 99 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வங்கி மோசடிகளால், நாட்டிற்கு ஏற்பட்ட நிதி இழப்பு குறித்த தகவல்கள் அளிக்கப்படவில்லை.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00