தேசத்துரோக வழக்கில் ஜே.என்.யூ. முன்னாள் மாணவி ஷீலா ரஷீத்தை கைது செய்ய டெல்லி நீதிமன்றம் இடைக்கால தடை

Sep 10 2019 2:36PM
எழுத்தின் அளவு: அ + அ -
டெல்லியில் உள்ள ஜே.என்.யூ. பல்கலைக்கழக முன்னாள் மாணவியான ஷீலா ரஷீத் காஷ்மீரை சேர்ந்தவர். சமூக வலைதளங்களில், பல்வேறு சமூக கருத்துகளை எழுதி வரும் ஷீலா ரஷீத், தமது பதிவுகள் மூலம் தேசத்திற்கு எதிராக பொய்யான தகவல்களைப் பரப்பி வருவதாக, கடந்த மாதம் 19ம் தேதி, அவர்மீது கிரிமினல் புகார் பதிவு செய்யப்பட்டது. இந்திய ராணுவம் மற்றும் அரசுக்‍கு எதிராக போலிச் செய்திகளைப் பரப்பியதாக, உச்சநீதிமன்ற வழக்‍கறிஞர் அலோக் ஸ்ரீவஸ்த்தவா இந்த வழக்‍கை தொடுத்தார். இதுதொடர்பாக, ஷீலா ரஷீத் மீது, டெல்லி திலக் மார்க் காவல் நிலையத்தில், முதல் தகவல் அறிக்‍கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, தம்மை கைது செய்ய இடைக்கால தடை விதிக்க கோரி, ஷீலா ரஷீத் தரப்பில் பட்டியாலா நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த விஷயத்தில் விரிவான விசாரணை தேவை என்று கூறிய நீதிமன்றம், வழக்கை நவம்பர் 5ம் தேதிக்கு ஒத்திவைத்ததுடன், அதுவரை, ஷீலா தீட்சித்தை கைது செய்ய இடைக்கால தடையும் விதித்தது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00