இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் ஐ.நா. சபையில் சமர்ப்பிக்கவுள்ள ஆவணங்களின் தகவல்கள் ஊடகங்களில் வெளியானதால் பரபரப்பு - ஆசியாவின் ஹிட்லர் பிரதமர் மோடி - காஷ்மீர் விவகாரத்தில் ராகுல்காந்தி, ஒமர் அப்துல்லா தெரிவித்த கருத்துகளும் அடக்கம்

Sep 10 2019 7:23PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஐ.நா. சபையில், இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் சமர்ப்பிக்கவுள்ள ஆவணங்களின் தகவல்களை பாகிஸ்தான் ஊடகங்களில் வெளியாகியுள்ளன. பிரதமர் மோடியை ஆசியாவின் ஹிட்லர் எனக்குறிப்பிட்டும், காஷ்மீர் விவகாரம் குறித்து ராகுல்காந்தி மற்றும் ஒமர் அப்துல்லா ஆகியோர் தெரிவித்த கருத்துகளும் அந்த ஆவணங்களின் இடம்பெற்றுள்ளன.

ஐக்கிய நாடுகளின் 42 வது கூட்டம் ஜெனிவாவில் நேற்று கூடியது. இந்த கூட்டத்தில் தொடக்‍க உரையாற்றிய ஆணையர் Michelle Bachelet, காஷ்மீர் விவகாரம் மற்றும் அசாமில் 19 லட்சம் பேர் தேசிய குடியுரிமை பதிவேட்டிலிருந்து நீக்கப்பட்ட விவகாரத்தில் இந்தியாவிற்கு கண்டனம் தெரிவித்தார். மனித உரிமைகளை மதித்து செயல்பட வேண்டும் என்றும் இந்தியாவிற்கு அவர் அறிவுறுத்தினார். இதனைத் தொடர்ந்து இந்தியாவும், பாகிஸ்தானும் காஷ்மீர் விவகாரம் குறித்து ஐ.நா. சபையின் இன்று உரையாற்றவுள்ளன. இதில் பாகிஸ்தான் தரப்பிலிருந்து முன்வைக்கவுள்ள ஆவணங்களின் தகவல்கள் அந்நாட்டு ஊடகங்களில் வெளியாகியுள்ளன. இதன் முதல் பக்கத்தில், பிரதமர் நரேந்திர மோடியை "ஆசியாவின் ஹிட்லர்" என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் காஷ்மீர் மக்களின் சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியதும், இந்தியாவின் ஒருதலைப்பட்சமான முடிவை எதிர்த்து போராட தயாராக இருப்பதாக, காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஒமர் அப்துல்லா தெரித்த கருத்தும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3626.00 Rs. 3783.00
மும்பை Rs. 3650.00 Rs. 3903.00
டெல்லி Rs. 3666.00 Rs. 3914.00
கொல்கத்தா Rs. 3705.00 Rs. 3962.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.40 Rs. 50400.00
மும்பை Rs. 50.40 Rs. 50400.00
டெல்லி Rs. 50.40 Rs. 50400.00
கொல்கத்தா Rs. 50.40 Rs. 50400.00