மலையாள மக்‍களின் ஓணம் பண்டிகை இன்று கோலாகல கொண்டாட்டம் - அத்தப்பூ கோலங்களிட்டு, திருவாதிரை நடனமாடி மக்‍கள் உற்சாகம்

Sep 11 2019 1:08PM
எழுத்தின் அளவு: அ + அ -
மலையாள மக்களின் முக்கிய பண்டிகையான ஓணம் பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. கேரளா மட்டுமின்றி, அண்டை மாவட்டமான கன்னியாகுமரியிலும் ஓணத்தை​யொட்டி அத்தப்பூ கோலங்களிட்டு, திருவாதிரை நடனங்களாடி மக்‍கள் உற்சாகமாகக்‍ கொண்டாடி வருகின்றனர்.

கேரள மக்களின் வசந்த விழா என்று என்றழைக்கப்படும் ஓணம் பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மலையாள மொழி பேசும் மக்கள் அதிகம் வாழும் கன்னியாகுமரி மாவட்டத்திலும் ஓணம் பண்டிகை உற்சாகமாகக்‍ கொண்டாடப்பட்டு வருகிறது.

மகாபலி சக்‍கரவர்த்தியை வரவேற்கும் விதமாக, வீடுகள் மற்றும் பொது இடங்களில் விதவிதமான அத்தப்பூ கோலங்களிட்டு, திருவாதிரை நடனங்கள் ஆடி, சிறப்பு விருந்து வழங்கி ஓணம் பண்டிகையை மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

கோவையை அடுத்த தென்னம்பாளையத்தில் உள்ள கல்லூரி ஒன்றில், மாணவ, மாணவிகள் ஓணம் பண்டிகையை கோலாகலமாகவும், உற்சாகமாகவும் கொண்டாடினர். மாணவர்கள் வேட்டி சட்டையுடனும், மாணவிகள் கேரளாவின் பாரம்பரிய புடவை அணிந்தும் ஓணம் பண்டிகையை கொண்டாடினர். கல்லூரி வளாகத்தில் நடனமாடியும், பாட்டு பாடியும் மகிழ்ந்தனர். பின்னர் செண்டை மேளம் இசைக்கப்பட்டு, அதன் இசைக்கு ஏற்ப நடனமாடி மகிழ்ந்தனர். அத்தப்பூ கோலமிட்டு, ஒருவருக்கு ஒருவர் ஓணம் வாழ்த்துக்களை தெரிவித்துக்‍ கொண்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3626.00 Rs. 3783.00
மும்பை Rs. 3650.00 Rs. 3903.00
டெல்லி Rs. 3666.00 Rs. 3914.00
கொல்கத்தா Rs. 3705.00 Rs. 3962.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.40 Rs. 50400.00
மும்பை Rs. 50.40 Rs. 50400.00
டெல்லி Rs. 50.40 Rs. 50400.00
கொல்கத்தா Rs. 50.40 Rs. 50400.00