ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு வீட்டு காவல் - ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அரசு அதிரடி நடவடிக்கை

Sep 11 2019 6:08PM
எழுத்தின் அளவு: அ + அ -
அரசுக்கு எதிராக உண்ணாவிரத போராட்டம் அறிவித்துள்ள ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவரது மகனும் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளதால் அங்கு பதற்றம் நிலவுகிறது.

ஆந்திராவில் ஆளும் ஒ.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி அரசியல் வன்முறையில் ஈடுபடுவதாகவும் அரசை கேள்வி கேட்கும் தங்கள் மீது காவல்துறையை கொண்டு அடக்க முயற்சிப்பதாகவும் தெலுங்குதேசம் கட்சி விமர்சித்தது. இப்பிரச்சினையை முன்வைத்து இன்று காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடபோவதாக முன்னாள் முதலமைச்சரும், தெலுங்குதேச கட்சி தலைவருமான சந்திரபாபு ஏற்கெனவே அறிவித்திருந்தார். அதன்படி இன்று காலை அவர் உண்ணாவிரதத்தை தொடங்கிய நிலையில், சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது மகன் லோகேஷ் ஆகியோரை போலீசார் வீட்டுக் காவலில் வைத்தனர். வீட்டை சுற்றிலும் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். இதுபற்றிய தகவலறிந்ததும், அவரது வீட்டை நோக்கி செல்லும் தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்களையும் போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனால் நரசராவ்பேட்டா, சட்டனப்பள்ளி, பல்நாடு, குரஜாலா உள்ளிட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள சந்திரபாபு, வீட்டில் இருந்தபடியே உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3600.00 RS. 3780.00
மும்பை Rs. 3670.00 Rs. 3770.00
டெல்லி Rs. 3665.00 Rs. 3785.00
கொல்கத்தா Rs. 3699.00 Rs. 3839.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.30 Rs. 47300.00
மும்பை Rs. 47.30 Rs. 47300.00
டெல்லி Rs. 47.30 Rs. 47300.00
கொல்கத்தா Rs. 47.30 Rs. 47300.00