எதிர்க்கட்சிகள் மற்றும் மைனாரிட்டி மக்களுக்கு எதிராக ஜெகன்மோகன் அரசு அடக்குமுறையை கையாளுகிறது - மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் என சந்திரபாபு நாயுடு எச்சரிக்கை

Sep 11 2019 6:08PM
எழுத்தின் அளவு: அ + அ -
வீட்டு காவலில் வைத்திருப்பதால் தன்னை ஒருபோதும் கட்டுப்படுத்த முடியாது என ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

ஆந்திராவில் ஆளும் ஒ.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி அரசியல் வன்முறையில் ஈடுபடுவதாகவும் அரசை கேள்வி கேட்கும் தங்கள் மீது காவல்துறையை கொண்டு அடக்க முயற்சிப்பதாகவும் தெலுங்குதேசம் கட்சி விமர்சித்தது. இப்பிரச்சினையை முன்வைத்து இன்று காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடபோவதாக முன்னாள் முதலமைச்சரும், தெலுங்குதேச கட்சி தலைவருமான சந்திரபாபு ஏற்கெனவே அறிவித்திருந்தார். அதன்படி இன்று காலை அவர் உண்ணாவிரதத்தை தொடங்கிய நிலையில், சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது மகன் லோகேஷ் ஆகியோரை போலீசார் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். இதனால் ஆந்திர அரசியலில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

இந்தநிலையில், இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திரு.சந்திரபாபு நாயுடு, வீட்டுக்காவல் மூலம் தன்னை அடக்கிவிட முடியாது என ஆக்ரோஷத்தோடு தெரிவித்தார். சிறுபான்மையின மக்கள் மீது அரசு அடக்குமுறைகளை ஏவிவருவதாகவும், இதுபோன்ற நடவடிக்கைகளை நிறுத்திக்கொள்ள வேண்டும் என அவர்களை எச்சரித்ததாகவும் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3626.00 Rs. 3783.00
மும்பை Rs. 3650.00 Rs. 3903.00
டெல்லி Rs. 3666.00 Rs. 3914.00
கொல்கத்தா Rs. 3705.00 Rs. 3962.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.40 Rs. 50400.00
மும்பை Rs. 50.40 Rs. 50400.00
டெல்லி Rs. 50.40 Rs. 50400.00
கொல்கத்தா Rs. 50.40 Rs. 50400.00