உலகளாவிய அச்சுறுத்தலாக தீவிரவாதம் மாறியுள்ளது என பிரதமர் மோடி கருத்து - பயங்கரவாதத்தின் ஆழமான வேர்களை பாகிஸ்தான் வளர்த்து வருவதாகவும் குற்றச்சாட்டு

Sep 11 2019 6:13PM
எழுத்தின் அளவு: அ + அ -
உலகளாவிய அச்சுறுத்தலாக தீவிரவாதம் மாறி உள்ளதாகவும், அதன் ஆழமான வேர்களை பாகிஸ்தான் வளர்த்து வருவதாகவும் பிரதமர் திரு. நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார்.

தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தை பிரதமர் திரு. மோடி இன்று தொடங்கி வைத்தார். இதற்காக உத்தரப்பிரதேசம் வருகை தந்த பிரதமரை, அம்மாநில முதலமைச்சர் திரு. யோகி ஆதித்யாநாத் வரவேற்றார். மதுரா நகரில் நடைபெற்ற விழாவில், கால்நடை நோய் தடுப்பு திட்டத்தை திரு. மோடி துவக்கி வைத்தார். விலங்குகளுக்‍கு ஏற்படும் தொற்று நோய்களை தடுப்பூசியின் மூலம் முற்றிலுமாக அழித்தொழிப்பதே இத்திட்டத்தின் நோக்கம் என்று அவர் கூறினார். தேசிய கால்நடை செயற்கை கருத்தரிப்பு முறை திட்டத்தையும் தொடங்கி வைத்த பிரதமர் மோடி, அங்குள்ள பசு பராமரிப்பு மையத்தை பார்வையிட்டார். அங்கு, குப்பையில் இருந்து பிளாஸ்டிக் கழிவை பிரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பெண்களிடம் அவர் கலந்துரையாடினார்.

விழாவில் உரையாற்றிய பிரதமர் மோடி, வரும் அக்டோபா 2ம் தேதி முதல், ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை அனைவரும் தவிர்க்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்‍கூடிய பிளாஸ்டிக்கை அகற்ற சுய உதவி குழுக்கள் உதவ வேண்டும் என்று வலியுறுத்தினார். தொடர்ந்து பேசிய அவர், உள்நாடு மட்டுமன்றி, உலகளாவிய அச்சுறுத்தலாக தீவிரவாதம் மாறி உள்ளதாகவும், அதன் ஆழமான வேர்களை பாகிஸ்தான் நீருற்றி வளர்த்து வருவதாகவும் குற்றம் சாட்டினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3600.00 RS. 3780.00
மும்பை Rs. 3670.00 Rs. 3770.00
டெல்லி Rs. 3665.00 Rs. 3785.00
கொல்கத்தா Rs. 3699.00 Rs. 3839.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.30 Rs. 47300.00
மும்பை Rs. 47.30 Rs. 47300.00
டெல்லி Rs. 47.30 Rs. 47300.00
கொல்கத்தா Rs. 47.30 Rs. 47300.00