போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதங்களை குறைப்பது குறித்து, மாநில அரசுகளே முடிவு செய்து கொள்ளலாம் - மத்திய அமைச்சர் நிதின் கட்காரி அறிவிப்பு

Sep 11 2019 6:44PM
எழுத்தின் அளவு: அ + அ -
போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதங்களை குறைப்பது குறித்து, அந்தந்த மாநில அரசுகளே முடிவு செய்து கொள்ளலாம் என மத்திய சாலை போக்‍குவரத்து அமைச்சர் திரு. நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.

பா.ஜ.க. ஆட்சி அல்லாத மாநிலங்களில் மோட்டார் வாகனச் சட்டத்திருத்தத்தை அமல்படுத்தப்பபோவதில்லை என அந்தந்த மாநில அரசுகள் முடிவெடுத்தன. ஆனால், கேரளாவில், மோட்டார் வாகனச் சட்டத்திருத்தம் அமல்படுத்தப்பட்டது. அதேநேரம், அதிக அபராதம் வசூலிக்‍கப்பட்டதால், அம்மாநிலத்தில், பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து அபராதம் வசூலிக்கும் நடவடிக்கையை கேரள அரசு நிறுத்தி வைத்தது. அதேபோல், மோட்டார் வாகன சட்டங்களுக்கான அபராதத்தை குஜராத் அரசும், 50 சதவீதம் குறைத்துள்ளது.

இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த, மத்திய சாலை போக்‍குவரத்து அமைச்சர் திரு. நிதின் கட்கரி, மோட்டார் வாகன சட்டத்திருத்தப்படி அதிக அபராதம் வசூலிக்‍கப்படுவது, வருமானத்திற்காக அல்ல என்று தெரிவித்தார். சாலை விபத்துகளால் ஏற்படும் உயிர் இழப்புகளை தவிர்க்‍கவே, அபராதத் தொகை அதிகரிக்‍கப்பட்டதாகவும், அபராதங்களை குறைப்பது குறித்து, அந்தந்த மாநில அரசுகளே முடிவு செய்து கொள்ளலாம் என்றும் கூறினார். அபராதம் மூலம் கிடைக்கும் வருமானம் மாநில அரசுகளுக்கு செல்லுமே தவிர, மத்திய அரசுக்கு இல்லை என்றும் திரு. கட்கரி குறிப்பிட்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3644.00 RS. 3826.00
மும்பை Rs. 3760.00 Rs. 3860.00
டெல்லி Rs. 3725.00 Rs. 3845.00
கொல்கத்தா Rs. 3765.00 Rs. 3905.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.50 Rs. 47500.00
மும்பை Rs. 47.50 Rs. 47500.00
டெல்லி Rs. 47.50 Rs. 47500.00
கொல்கத்தா Rs. 47.50 Rs. 47500.00