சந்திரயான் 2 ஆர்பிட்டரின் ஆயுள் காலத்தை நீட்டிக்க இஸ்ரோ முடிவு - எஞ்சியுள்ள 500 கிலோ எரிபொருளைக் கொண்டு 7 ஆண்டுகள் வரை இயக்க திட்டம்

Sep 11 2019 6:45PM
எழுத்தின் அளவு: அ + அ -
சந்திரயான்-2 விண்கல ஆர்பிட்டரின் ஆயுள் காலத்தை 7 ஆண்டுகள் வரை நீட்டிக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான்-2 விண்கலத்தின் லேண்டர் கருவியான விக்‍ரம், கடந்த 7ம் தேதி, நிலவின் குறிப்பிட்ட இடத்தில் தடம் பதிக்‍க வேண்டிய இறுதி நேரத்தில், தகவல் தொடர்பை இழந்தது.

அதேநேரம், சந்திரயான்-2 விண்கலத்தின் ஆர்பிட்டர், நல்ல நிலையில், நிலவின் சுற்றுவட்டப்பாதையில் பயணித்து வருகிறது. விக்‍ரம் லேண்டரின் இருப்பிடத்தை, ஆர்பிட்டர் கருவி புகைப்படம் எடுத்து அனுப்பியது.

அடுத்த ஓராண்டிற்கு, நிலவின் சுற்றுவட்டப்பாதையில் பயணித்து, ஆர்பிட்டர், ஆய்வை மேற்கொள்ளும் என இஸ்ரோ முன்பு அறிவித்திருந்தது. ஆனால் தற்போது விக்ரம் லேண்டர் உடனான தொடர்பு கிடைக்க தாமதம் ஆவதால், ஆர்பிட்டரின் ஆயுள் காலத்தை 7 ஆண்டுகள் வரை நீட்டிக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

ஆயிரத்து 697 கிலோ எரிபொருளுடன் சென்ற சந்திரயான்-2 விண்கலத்தின் ஆர்பிட்டரில் தற்போது 500 கிலோ எரிபொருள் மட்டுமே மீதம் உள்ளது. இருப்பினும் 7 ஆண்டுகள் வரை ஆர்பிட்டரை பயணிக்க செய்ய முடியும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3626.00 Rs. 3783.00
மும்பை Rs. 3650.00 Rs. 3903.00
டெல்லி Rs. 3666.00 Rs. 3914.00
கொல்கத்தா Rs. 3705.00 Rs. 3962.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.40 Rs. 50400.00
மும்பை Rs. 50.40 Rs. 50400.00
டெல்லி Rs. 50.40 Rs. 50400.00
கொல்கத்தா Rs. 50.40 Rs. 50400.00