உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் இ-சிகரெட் - இந்தியாவில் தடை விதிப்பது குறித்து மத்திய அரசு தீவிர ஆலோசனை

Sep 12 2019 1:09PM
எழுத்தின் அளவு: அ + அ -
இ சிகரெட்களுக்கு தடை விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சர்வதேச அளவில் இ சிகரெட்களால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருகிறது. அண்மையில் அமெரிக்காவில் இ சிகரெட் பயன்படுத்திய 5 பேர் உயிரிழந்த நிலையில், இதுவரை 450 பேர் நுரையீரல் பிரச்சனைகளால் அவதிப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே, இ.சிகரெட்களை பயன்படுத்த வேண்டாம் என இளைஞர்களுக்கு அமெரிக்க மருத்துவர்கள் கூட்டமைப்பு எச்சரித்துள்ளது. இந்தியாவிலும் இ.சிகரெட் புகைப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், அதற்கு தடை விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இ.சிகரெட் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை விதிக்கும் அவசர சட்டத்திற்கு மத்திய அரசு விரைவில் ஒப்புதல் வழங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சட்டத்தின் கீழ் இ.சிகரெட் தயாரிப்பு, உற்பத்தி, இறக்குமதி, ஏற்றுமதி, விற்பனை மற்றும் விளம்பரம் செய்தல் ஆகியவை தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படும்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00