தூர்தர்ஷன் தொலைக்காட்சி தொடங்கப்பட்டு 60-வது ஆண்டு : சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள்

Sep 16 2019 2:08PM
எழுத்தின் அளவு: அ + அ -
மத்திய அரசின் தூர்தர்ஷன் தொலைக்‍காட்சி தொடங்கப்பட்டு இன்று 60வது ஆண்டில் அடியெடுத்து வைக்‍கிறது. இதையொட்டி, சிறப்பு நிகழ்ச்சிகளுக்‍கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கடந்த 1959ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இதே நாளில் பரிசோதனை முயற்சியாக தூர்தர்ஷன் தொடங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 1965-ம் ஆண்டில் சேவையாக மாற்றம்பெற்றது. அதன்பிறகு நடைபெற்ற பலகட்ட சோதனைகளுக்‍குப் பிறகு 1972-ல் மும்பை, அம்ரிட்சர் நகரங்களில் நாட்டின் முதல் தொலைக்‍காட்சியாக தூர்தர்ஷன் மலர்ந்தது. பின்னர் 1975-ல் சென்னை உட்பட நாட்டின் பல்வேறு நாடுகளுக்‍கு தூர்தர்ஷன் சேவை விரிவுபடுத்தப்பட்டது. தற்போது தூர்தர்ஷன் தொலைக்‍காட்சி அருகுபோல் வேர்விட்டு 34 செயற்கைக்‍கோள்களுடன் ஆலமரமாய் தழைத்தோங்கி வளர்ந்து நிற்கிறது.

கல்வி, விவசாயம், விஞ்ஞானம், விளையாட்டு போன்ற பல்வேறு துறைகளுக்‍கு மட்டுமின்றி நாடாளுமன்ற நிகழ்வுகளை பிரத்யேகமாக ஒளிபரப்பும் தொலைக்‍காட்சி என 34 சேனல்களுடன் தன்னிகரற்ற சேவைபுரிந்து வருகிறது தூர்தர்ஷன் தொலைக்‍காட்சி.

அறுபதாம் ஆண்டில் தூர்தர்ஷன் அடியெடுத்து வைப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரச்சார் பாரதியின் தலைமை செயல் அதிகாரி சாக்‍ஷி சேகர், தூர்தர்ஷனுக்‍கு 60 ஆண்டுகள் ஆனாலும், அதற்கு வயது ஆகிவிடவில்லை எனக்‍ கூறினார். இன்றைய டிஜிட்டல் தலைமுறையினரையும் கவர்ந்திழுக்‍கும் ஆற்றலோடு தூர்தர்ஷன் வெற்றிநடை போடுவதாக அவர் பெருமிதம் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 49.50 Rs. 49000.00
மும்பை Rs. 49.50 Rs. 49000.00
டெல்லி Rs. 49.50 Rs. 49000.00
கொல்கத்தா Rs. 49.50 Rs. 49000.00