ஆந்திர முன்னாள் சட்டப்பேரவை சபாநாயகர் தூக்கிட‌்டு தற்கொலை - சமீபகாலமாக மன உளைச்சலில் இருந்ததாக தகவல்

Sep 16 2019 7:09PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஆந்திர மாநில முன்னாள் சபாநாயகர் கோடல சிவபிரசாத் ராவ், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் திரு. சந்திரபாபு நாயுடு ஆட்சிக் காலத்தில், சட்டப்பேரவை சபாநாயகராக இருந்தவர் கோடல சிவபிரசாத் ராவ். தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த இவர் மீது, முதலமைச்சர் திரு. ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சி அமைந்ததும், பல்வேறு வழக்குகள் பதியப்பட்டன.

சட்டப்பேரவையில் இருந்த நாற்காலிகளை, தனது வீட்டில் வைத்திருந்ததாக, கோடல சிவபிரசாத் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனால், அவர் மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று, ஹைதராபாத்தில் உள்ள வீட்டில், கோடல சிவபிரசாத் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது மறைவுக்கு முதலமைச்சர் திரு. ஜெகன் மோகன் ரெட்டி, தெலுங்கு தேசம் கட்சி தலைவர் திரு. சந்திரபாபு நாயுடு ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00