விக்‍ரம் லேண்டருடன் தொடர்பை ஏற்படுத்தும் முயற்சி தீவிரம் - நாசாவின் ஆர்பிட்டர் நாளை புகைப்படம் எடுக்கிறது

Sep 16 2019 9:07PM
எழுத்தின் அளவு: அ + அ -
விக்‍ரம் லேண்டருடன் தொடர்பை ஏற்படுத்தும் முயற்சியில் இஸ்ரோவுக்‍கு துணையாக அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா களம் இறங்கி உள்ளநிலையில், விக்ரம் லேண்டரை நாசாவின் ஆர்பிட்டர் நாளை புகைப்படம் எடுக்க உள்ளது.

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான்-2 விண்கலத்தின் லேண்டர் கருவியான விக்‍ரம், கடந்த 7ம் தேதி, நிலவின் குறிப்பிட்ட இடத்தில் தடம் பதிக்‍க வேண்டிய இறுதி நேரத்தில், தகவல் தொடர்பை இழந்தது.

அதேநேரம், ஹாட் லேண்டிங் தொழில்நுட்ப முறையில் நிலவில் தரையிறங்கி உள்ள விக்‍ரம் லேண்டர், அசைவற்ற நிலையில் உள்ளது. அதனுடன் தொடர்பை ஏற்படுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

லேண்டருடன் தொடர்பை ஏற்படுத்தும் முயற்சியில் இந்தியாவுக்கு துணையாக அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா களமிறங்கி உள்ளது. ரேடியோ அதிர்வெண்கள் மூலம் விக்ரமை தொடர்பு கொள்ள நாசா முயற்சித்து வருகிறது. இஸ்ரோவின் ஒப்புதலுடன், Deep space network மூலம் விக்ரமை தொடர்பு கொள்ள முயற்சித்து வருவதாக நாசா தெரிவித்துள்ளது.

நிலவை சுற்றிவரும் நாசாவின் ஆர்பிட்டர், நாளை, விக்ரம் லேண்டர் தரையிறங்கிய பகுதியை கடக்க உள்ளதாகவும், அப்போது அதை புகைப்படம் எடுத்து, இஸ்ரோவுடன் அதனை பகிர்ந்துகொள்ளும் எனவும் நாசா தெரிவித்துள்ளது.

இதனிடையே, சந்திரயான்-2, விக்ரம் லேண்டர் ஆகியவை குறித்து இந்தியாவைப் போல பாகிஸ்தானிலும் ஆர்வத்தோடு கூகுளில் தேடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 6, 7 ஆகிய தேதிகளில், இந்த வார்த்தைகள், கூகுள் ட்ரெண்டிங்கில் முன்னிலையில் இருந்தது குறிப்பிடத்தக்‍கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00