பிரதமர் மோடியின் 69-வது பிறந்தநாள் : பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு பா.ஜ.க.வினர் ஏற்பாடு

Sep 17 2019 11:55AM
எழுத்தின் அளவு: அ + அ -
பிரதமர் மோடியின் பிறந்தநாளையொட்டி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் பா.ஜ.க.வினர், கேக் வெட்டி கொண்டாடி வருகின்றனர்.

பிரதமர் மோடி இன்று தமது 69 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். மோடியின் தலைமையில் சமூக நலப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் இன்று நடைபெறுகின்றன. பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 69-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பிறந்தநாளை சொந்த ஊரில் கொண்டாடுவதற்காக அவர் நேற்று இரவு தனி விமானம் மூலம் அகமதாபாத் சென்றார். விமான நிலையத்தில், குஜராத் ஆளுநர் ஆச்சார்யா, முதலமைச்சர் விஜய் ரூபானி மற்றும் அரசு அதிகாரிகள் மோடியை வரவேற்றனர். பிறந்தநாளையொட்டி, இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்ளவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடியின் பிறந்தநாளை வடமாநில மக்கள் மற்றும் பாஜகவினர் கொண்டாடி வருகின்றனர். உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில், நள்ளிரவில் மக்கள் அகல்விளக்குகளை வைத்து மோடிக்கு வாழ்த்து தெரிவித்தனர். மத்தியபிரதேச மாநிலம் போபாலில், பாஜக தொண்டர்கள் மோடியின் 69-வது பிறந்தநாளை 69 அடி நீளமுள்ள கேக்கை வெட்டி கொண்டாடினர். டெல்லியில் இந்தியா கேட் பகுதியில் பாஜக எம்.பி மனோஜ் திவாரி, கட்சித் தொண்டர்களுடன் கேக் வெட்டி கொண்டாடினர். வாரணாசியில் மோடியின் ஆதரவாளர் ஒருவர், சங்கத் மோச்சன் கோயிலில் உள்ள அனுமன் சிலைக்கு சுமார் ஒன்றரை கிலோவில் தங்கத்தாலான கிரீடத்தை காணிக்கையாக வழங்கியுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00