விக்‍ரம் லேண்டர் கருவியுடன் தொடர்பு ஏற்படுத்தும் முயற்சியில் பின்னடைவு - இந்தியர்களின் உத்வேகத்தால் தொடர்ந்து முன்னேறுவோம் : துணை நிற்கும் மக்‍களுக்‍கு நன்றி - இஸ்ரோ

Sep 18 2019 11:42AM
எழுத்தின் அளவு: அ + அ -
நிலவின் தென்துருவத்தில் இருக்கும்​ விக்‍ரம் லேண்டர் கருவியுடன் தொடர்பு ஏற்படுத்தும் முயற்சியில் பின்னடைவு ஏற்பட்டுள்ள நிலையில், இந்தியர்களின் உத்வேகத்தால் தொடர்ந்து முன்னேறுவோம் என்றும், தங்களுடன் துணை நிற்கும் மக்‍களுக்‍கு நன்றி என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான்-2 விண்கலத்தின் லேண்டர் கருவியான விக்‍ரம், கடந்த 7ம் தேதி, நிலவின் குறிப்பிட்ட இடத்தில் தடம் பதிக்‍க வேண்டிய கடைசி நேரத்தில், தகவல் தொடர்பை இழந்தது.

அதேநேரம், ஹாட் லேண்டிங் தொழில்நுட்ப முறையில் நிலவில் தரையிறங்கி உள்ள விக்‍ரம் லேண்டர், அசைவற்ற நிலையில் உள்ளது. அதனுடன் தொடர்பை ஏற்படுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

லேண்டருடன் தொடர்பை ஏற்படுத்தும் முயற்சியில் இந்தியாவுக்கு துணையாக அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா களமிறங்கி உள்ளது. ஆனாலும் விக்‍ரம் லேண்டருடன் இதுவரை தொடர்பை ஏற்படுத்த முடியாத சூழலில், வரும் 20ம் தேதி வரை முயற்சிகள் நடைபெறும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இதனிடையே, இந்தியர்களின் உத்வேகத்தால் தொடர்ந்து முன்னோக்கி செல்வோம் என்றும், தங்களுடன் துணை நிற்கும் மக்‍களுக்‍கு நன்றி என்றும் இஸ்ரோ, தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00