அயோத்தி வழக்‍கின் தீர்ப்பு நவம்பர் மாதம் வெளியாக வாய்ப்பு - இருதரப்பு வழக்கு விசாரணை அக்‍டோபர் 18ம் தேதியுடன் நிறைவு செய்ய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன்கோகோய் அறிவுறுத்தல்

Sep 18 2019 1:13PM
எழுத்தின் அளவு: அ + அ -
அயோத்தி வழக்கை விசாரித்து வரும் உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வில் இடம்பெற்றுள்ள தலைமை நீதிபதி திரு. ரஞ்சன் கோகோய், விரைவில் ஓய்வு பெறவிருப்பதால், வரும் அக்‍டோபர் 18ம் தேதியுடன், இருதரப்பு வாதங்களையும் முடிக்‍க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அயோத்தி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அமைத்த சமரசக்‍ குழு மூலம், பிரச்னைக்‍கு சுமூக தீர்வு எட்டப்படவில்லை. இதனால், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி திரு. ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, வழக்‍கை, வார விடுமுறை நாட்களை தவிர தினந்தோறும் நடத்தி வருகிறது. 25 நாட்களாக இரு தரப்பினரும் தங்கள் வாதபிரதிவாதங்களை வைத்து வரும் சூழலில், வரும் அக்‍டோபர் 18ம் தேதியுடன், இருதரப்பு வாதங்களையும் நிறைவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வழக்கை விசாரித்து வரும் அரசியல் சாசன அமர்வில் இடம்பெற்றுள்ள உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி திரு.ரஞ்சன் கோகோய் வரும் நவம்பர் 17ம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். தமது பதவிக்‍ காலத்திற்குள் தீர்ப்பை வெளியிட வேண்டும் என்று ரஞ்சன் கோகோய் திட்டமிட்டுள்ளதால், அதற்குள் தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்‍கப்படுகிறது. ஒருவேளை தீர்ப்பு தள்ளிப்போகும் பட்சத்தில், இந்த வழக்கை விசாரிக்க புதிய அரசியல் சாசன அமர்வை திரு.ரஞ்சன் கோகோய் அமைப்பார் என்றும் கூறப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00