விவசாய கடன் தள்ளுபடி கோரிக்‍கைகளை வலியுறுத்தி, விவசாயிகள் பிரம்மாண்ட பேரணி - டெல்லியை முற்றுகையிட்டதால் பரபரப்பு

Sep 21 2019 12:38PM
எழுத்தின் அளவு: அ + அ -
விவசாய கடன் தள்ளுபடி, கரும்பு நிலுவைத் தொகை, இலவச மின்சாரம் உள்ளிட்ட 16 கோரிக்‍கைகளை வலியுறுத்தி, உத்தரப்பிரதேசத்திலிருந்து பிரம்மாண்ட பேரணி தொடங்கிய சுமார் 15 ஆயிரம் விவசாயிகள், டெல்லியை நெருங்கியுள்ளனர்.

உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த விவசாயிகள், நீண்ட காலமாகவே, கரும்பு நிலுவைத் தொகையை அரசாங்கம் உடனடியாக விடுவிக்க வேண்டும், விவசாயக் கடன்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும், விவசாயத்துக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி, நொய்டாவின், செக்டார் 69 பகுதியிலிருந்து, கடந்த 17ம் தேதி, பேரணியைத் தொடங்கிய சுமார் 15 ஆயிரம் விவசாயிகள், டெல்லி கிசான் காட் பகுதியில் பேரணியை நிறைவு செய்கின்றனர்.

விவசாய அமைச்சக அதிகாரிகளுடனான தங்களின் பேச்சு தோல்வியடைந்ததையடுத்து, மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க பேரணியை நடத்துவதாக இந்திய விவசாயிகள் சங்கத்தலைவர் திரு. பூரண் விங் ​தெரிவித்தார்.

விவசாயிகள் பேரணி டெல்லியை நெருங்கி உள்ள நிலையில், தலைநகரில், பலத்து பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பேரணி நடைபெறும் வழிநெடுகிலும் துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00