சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவகுமார் ஜாமின் மனு - டெல்லி சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் 25-ம் தேதி தீர்ப்பு

Sep 21 2019 3:51PM
எழுத்தின் அளவு: அ + அ -
சட்ட விரோதப் பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள, கர்நாடக மாநில முன்னாள் அமைச்சர் திரு.டி.கே.சிவகுமார் தாக்கல் செய்துள்ள ஜாமின் மனு மீது, வரும் 25 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று டெல்லி சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவரும், கர்நாடக மாநில முன்னாள் அமைச்சருமான, திரு.டி.கே.சிவகுமாரை, சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில், அமலாக்கத் துறையினர் கைது செய்தனர். அமலாக்கத் துறை காவலு‍க்கு பின், அவரை, டெல்லி சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில், அமலாக்கத் துறை அதிகாரிகள் ஆஜர்படுத்தினர். வரும் அக்டோபர் மாதம் 1 ஆம் தேதி வ‌ரை, திரு.டி.கே.சிவகுமாரை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, அவர் டெல்லியில் உள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், திரு.டி.கே.சிவகுமார் சார்பில், டெல்லி சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில், ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இதை விசாரித்த நீதிமன்றம், ஜாமின் மனு மீது, வரும் 25 ஆம் தேதி தீர்ப்பு வழங்குவதாக அறிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00