சட்ட விரோதமாக யானை ‌தந்தங்களை வீட்டில் வைத்திருந்த வழக்கு - மலையாள நடிகர் மோகன் லாலுக்கு எதிராக கேரள வனத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல்

Sep 21 2019 5:46PM
எழுத்தின் அளவு: அ + அ -
சட்ட விரோதமாக யானை ‌தந்தங்களை வீட்டில் வைத்திருந்த வழக்கில், பிரபல மலையாள நடிகர் திரு. மோகன் லாலுக்கு எதிராக, கேரள மாநில வனத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள, பிரபல மலையாள நடிகர் திரு. மோகன் லால் வீட்டில், கடந்த 2012 ஆம் ஆண்டு வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது, அவரது வீட்டிலிருந்து யானை தந்தங்கள் கைப்பற்றப்பட்டன. இது தொடர்பாக, திரு. மோகன் லால் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

ஆனால், அப்போது மாநில வனத்துறை அமைச்சராக இருந்த, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் திருவாஞ்சூர் ராதாகிருஷ்ணனின் தலையீட்டால், திரு. மோகன் லால் மீதான வழக்கு கைவிடப்பட்டது. மேலும், தந்தங்களை திரு. மோகன் லாலே வைத்துக் கொள்ள அனுமதிக்கும் வகையில் சட்டம் திருத்தப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக, கேரள மாநில உயர் நீதிமன்றத்தில், அண்மையில், பொதுநல வழக்கு தொடரப்பட்டது. அதில், வன உயிர் பாதுகாப்புச் சட்டத்தின்படி, யானை தந்தங்களை ஒருவர் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது, தண்டனைக்குரிய குற்றம் என்று சுட்டிக் காட்டப்பட்டது. இதையடுத்து, பெரும்பாவூர் குற்றவியல் நீதிமன்றத்தில், திரு. மோகன் லாலுக்கு எதிராக, அம்மாநில வனத்துறையினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00