புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதியில் முதன்முறையாக இடைத்தேர்தல் - காங்கிரஸ் - என்.ஆர்.காங்கிரஸ் இடையே கடும் போட்டி

Sep 21 2019 5:32PM
எழுத்தின் அளவு: அ + அ -
புதுச்சேரி மாநில தொகுதி மறுசீரமைப்பில், புதிய தொகுதியாக பிரிக்கப்பட்ட காமராஜர் நகர் தொகுதிக்கு, முதன்முறையாக இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

புதுச்சேரியில், கடந்த 2011-ம் ஆண்டு, தொகுதி மறுசீரமைப்பில், காமராஜர் நகர் தொகுதி உருவாக்கப்பட்டது. பிருந்தாவனம், சித்தன்குடி, காமராஜர் நகர், கிருஷ்ணா நகர், ரெயின்போ நகர் உள்ளிட்ட பகுதிகளை, இந்த தொகுதி உள்ளடக்கி உள்ளது. புதுச்சேரி தொகுதி மறுசீரமைப்பில், புதிய தொகுதியாக பிரிக்கப்பட்ட காமராஜர் நகர் தொகுதிக்கு, முதன்முறையாக, அடுத்த மாதம் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால், புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினரும், சட்டப்பேரவை சபாநாயகருமான திரு. வைத்திலிங்கம், தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, காமராஜர் நகர் தொகுதிக்‍கு தேர்தல் அறிவிக்‍கப்பட்டுள்ளது.

இந்த தொகுதியில், தொடர்ந்து 2 முறை காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முதன்முறையாக நடைபெறும் இடைத்தேர்தலில், காங்கிரஸ், என்.ஆர்.காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இடையே கடும் ‍போட்டி இருக்கும் என்று கூறப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00