கர்நாடகாவில் காலியாக உள்ள 15 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு : 6 தொகுதிகளில் கட்டாயம் வென்றாக வேண்டிய நெருக்கடியில் பா.ஜ.க

Sep 22 2019 5:44PM
எழுத்தின் அளவு: அ + அ -
கர்நாடகாவின் 15 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் 21-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், குறைந்தது 6 தொகுதிகளில் வென்றால் மட்டுமே ஆட்சி தப்பும் என்ற இக்கட்டான நிலை எடியூரப்பா தலைமையிலான பா.ஜ.க அரசுக்கு ஏற்பட்டுள்ளது.

224 உறுப்பினர்களை கொண்ட கர்நாடக சட்டப்பேரவையில் காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 17 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். தகுதி நீக்கத்தை எதிர்த்து அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதற்கிடையே நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்று பாஜகவின் எடியூரப்பா முதலமைச்சராக பதவியேற்றார். இந்நிலையில், கர்நாடகாவில் காலியாக உள்ள 15 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

சுயேட்சை எம்.எல்.ஏ நாகேஷ் உட்பட எடியூரப்பா அரசுக்கு ஆதரவாக 106 எம்.எல்.ஏக்கள் உள்ள நிலையில், இடைத்தேர்தலில் குறைந்தது 6 தொகுதிகளில் வென்றால் மட்டுமே ஆட்சி தப்பும் என்ற நெருக்கடி பா.ஜ.க அரசுக்கு ஏற்பட்டுள்ளது. இடைத்தேர்தலில் தனித்துப் போட்டியிட விரும்புவதாக மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் திரு.தேவகவுடா கூறியுள்ளதால் காங்கிரஸ்- மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணியிலும் குழப்பம் நிலவுகிறது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00