நித்தியானந்தா ஆசிரமத்தில் மூளை சலவை செய்யப்பட்டு ஏமாற்றப்பட்டதாக கனடா நாட்டு இளம்பெண் பரபரப்பு புகார் - சிறுவர், சிறுமிகள் பலர் துன்புறுத்தப்படுவதாகவும் குற்றச்சாட்டு

Sep 22 2019 5:43PM
எழுத்தின் அளவு: அ + அ -
கனடா நாட்டை சேர்ந்த இளம் பெண் ஒருவர், நித்தியானந்தா தன்னை மூளை சலவை செய்து வைத்திருந்ததாகவும், அவரது குருகுலத்தில் சிறுவர், சிறுமிகள் கடுமையாக துன்புறுத்தப்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் உள்ள நித்யானந்தாவின் ஆசிரமத்தில் ஸ்ரீ நித்தியா ஸ்வரூப்ப பிரியானந்தா என்று பெயர் சூட்டப்பட்டவர், கனடா நாட்டு இளம் பெண் சாரா லேண்ட்ரி. இவர் இணையதளத்தில் தான் பேசிய வீடியோ பதிவு ஓன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கடந்த 2017 ஆம் ஆண்டு, திருவனந்தபுரத்தில் உள்ள குருகுலத்திற்கு செல்ல தான் பணிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். ஒருநாள் அதிகாலையில் அழுது கொண்டிருந்த இரு சிறுமிகளிடம் விசாரித்த போதுதான் அங்கு நடக்கின்ற கொடுமைகள் தனக்கு தெரிய வந்ததாக குறிப்பிட்டுள்ளார். அங்குள்ள குருக்குல ஆசிரியர்கள் சிறுவர், சிறுமிகளை தனித்தனியாக அடைத்து வைத்து, அடித்து துன்புறுத்தப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார். இயற்கை உபாதைகளை கழிக்க கூட சிறுவர்களுக்கு குறிப்பிட்ட நேரம் மட்டுமே ஒதுக்கப்படுதாக கூறியுள்ள சாரா, இது குறித்து நித்தியானந்தாவின் ஆசிரமத்தில் மேலாண்மை பணிகளை கவனிக்கும் ரஞ்சிதாவிடம் தெரிவித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளார். இது போன்று பலர் பாதிக்கப்பட்டுள்ள்தாகவும் சாரா லேண்டரி குற்றம் சாட்டியுள்ளார். தானும் நித்யானந்தாவால் மூளைச் சலவை செய்யப்பட்டு பாதிக்‍கப்பட்டதாகவும், இதனால் அங்கிருந்து வெளியேறி தாய் நாட்டிற்கே சென்றுவிட்டதாகவும் சாரா தெரிவித்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00