பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவுடன் இணைந்து அமெரிக்‍கா பாடுபடும் - ஹவ்டி மோடி நிகழ்ச்சியில் அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

Sep 23 2019 4:46PM
எழுத்தின் அளவு: அ + அ -
பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவுடன் இணைந்து அமெரிக்‍கா பாடுபடும் என அதிபர் டிரம்ப் சூளுரைத்துள்ளார்.

அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் ஹவ்டி மோடி நிகழ்ச்சியில் அதிபர் டிரம்ப் பங்கேற்று பேசினார். அப்போது, இந்தியாவின் ஒவ்வொரு முயற்சிக்கும் அமெரிக்கா துணை நிற்கும் என்றும், மோடி, சிறந்த செயல்களை செய்து வருகிறார் என்றும் தெரிவித்தார். அமெரிக்காவின் சிறந்த நண்பரான மோடியோடு மேடையில் இருப்பது மகிழ்ச்சி என குறிப்பிட்டார்.

ஜனநாயகத்தின் மீது இரு நாடுகளும் நம்பிக்கை வைத்துள்ளது. இரு நாடுகளும் அளப்பரிய வளர்ச்சி பெற மோடியுடன் இணைந்து செயல்படுவோம் என டிரம்ப் குறிப்பிட்டார். 60 கோடி இந்தியர்கள் பங்கெடுத்த தேர்தலில் மோடி தனிப்பெரும்பான்மை பெற்றதை டிரம்ப் சுட்டிக்‍காட்டினார்.

வறுமைக்கோட்டிற்கு கீழே இருந்த இந்தியாவில் மக்கள் வறுமை கோட்டுக்கு மேல் உயர்ந்துள்ளனர் என்று கூறிய டிரம்ப், மோடியின் அரசு பாராட்டும் வகையில் அமைந்துள்ளதாக தெரிவித்தார். பிரதமர் மோடியின் செயல் திட்டத்தால் கோடிக்கணக்கான மக்கள் பலன் பெற்றுள்ளனர் என குறிப்பிட்டுள்ள டிரம்ப், 30 கோடி மக்களை மோடி அரசு வறுமையின் பிடியில் இருந்து மீட்டுள்ளதாக கூறினார்.

உலகப்புகழ் பெற்ற என்.பி.ஏ., கூடைப்பந்து போட்டிகள் இந்தியாவில் நடத்தப்படும் என கூறிய டிரம்ப், மும்பையில் நடைபெறும் விளையாட்டு போட்டியை காண தாம் வர வாய்ப்பு உள்ளதாக கூறினார். வரும் நவம்பர் மாதம் இருநாடுகளும் இணைந்து ராணுவ பயிற்சியில் ஈடுபடும் என்றும், அமெரிக்காவை போல் இந்தியாவிற்கும் எல்லை பாதுகாப்பு மிகவும் முக்கியம் என்றும் கூறினார்.

இந்தியாவின் எல்லை பாதுகாப்பு பிரச்னையை அமெரிக்கா உணர்ந்துள்ளது. மக்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது என்றும் கூறினார். பயங்கரவாதிகளிடம் இருந்து மக்களை பாதுகாக்க இருநாடுகளும் இணைந்து செயல்படும் என கூறினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00