புதிய இந்தியாவை உருவாக்குவதே லட்சியம் : ஹூஸ்டன் நகரில் நடைபெற்ற ஹவுடி- மோடி நிகழ்ச்சியில், ஆயிரக்கணக்கான இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேச்சு

Sep 23 2019 6:11PM
எழுத்தின் அளவு: அ + அ -
புதிய இந்தியாவை உருவாக்குவதே லட்சியம் என ஹவுடி-மோடி நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி குறிப்பிட்டார். பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் தரும் ஒரு நாடு எது என்பதை உலகம் அறிந்துள்ளது என்று கூறிய மோடி, பயங்கரவாதத்திற்கு எதிராக உறுதியுடன் போராட வேண்டிய நேரம் இது எனவும் பாகிஸ்தானை மறைமுகமாக எச்சரித்தார்.

பிரதமர் திரு. நரேந்திர மோடி, அமெரிக்‍க அதிபர் டொனால்டு டிரம்ப் இருவரும் கலந்து கொண்ட ஹவுடி-மோடி நிகழ்ச்சி, டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹூஸ்டன் நகரில் நடைபெற்றது. இதில் பேசிய பிரதமர் மோடி, உலக அரசியலை, நிர்ணயிக்கும், நபராக, டிரம்ப் விளங்குகிறார் என்றும், ஒவ்வொரு முறையும் அவரை சந்திக்கும் போது உற்சாகம் ஏற்படுகிறது என்றும் கூறினார். வெள்ளை மாளிகை உடனான இந்தியாவின் உண்மையான நட்புறவு புது உச்சத்தில் இருக்கிறது என்று கூறினார்.

அனைவருக்கும் வளர்ச்சி என்பதே எங்களது இலக்கு என்றும், புதிய இந்தியாவே தனது லட்சியம் என்றும் கூறினார். புதிய இந்தியாவை படைக்க இரவு பகலாக உழைத்து வருகிறோம் என கூறிய பிரதமர், இந்திய தேர்தல் ஒரு ஜனநாயக திருவிழா என்றும், இந்தியாவில் அதிக அளவில் பெண் வாக்காளர்கள் உள்ளனர் என்றும் கூறினார். 24 மணி நேரத்தில் இந்தியாவில் ஒருவர் தொழில் துவங்கலாம். சவால்களை நிர்ணயித்து மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறோம். பெரிய வெற்றிகளை நோக்கி கனவு காண்கிறோம் என பிரதமர் திரு. மோடி பெருமிதம் தெரிவித்தார்.

ஜி.எஸ்.டி.,அமலுக்கு வந்துவிட்ட நிலையில், வரி செலுத்துவதை எளிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கூறினார். வருமான வரி ஆன்லைனில் செலுத்தும் வசதியை கொண்டு வந்துள்ளோம் என்று கூறிய பிரதமர், 50 லட்சத்திற்கும் அதிகமானோர் ஆன்லைனில் வரி செலுத்தி உள்ளனர் என தெரிவித்தார்.

காஷ்மீருக்கு வழங்கப்பட்ட 370 சட்டப்பிரிவை பயன்படுத்தி பிரிவினைவாத அமைப்புகளும், பயங்கரவாதிகளும் ஆதாயம் தேடிக் கொண்டிருந்தனர் என பிரதமர் கூறினார். சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதால், பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. பயங்கரவாதிகளுக்கு ஒரு நாடு அடைக்கலம் தந்து வருகிறது என குற்றம்சாட்டினார். அது எந்த நாடு என்பது உலகம் அனைத்திற்கும் தெரியும். பயங்கரவாதத்திற்கு எதிராக உறுதியுடன் போராட வேண்டிய நேரம் இது என பிரதமர் சுட்டிக்‍காட்டினார்.

இந்தியாவில் நிறைய மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன என குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, புதிய மாற்றங்களை நோக்கி நகர்ந்து வருவதாகவும், சவால்கள் தான், லட்சியங்களின் உந்து சக்தி என்றும் பிரதமர் கூறினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00