சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்ததுபோல் சபரிமலை விவகாரத்திலும் சட்டம் இயற்றுவது குறித்து மத்திய அரசு பரிசீலனை - மத்திய அமைச்சர் சதானந்த கவுடா தகவல்

Oct 9 2019 12:31PM
எழுத்தின் அளவு: அ + அ -
சபரிமலை விவகாரத்தில் சட்டம் இயற்றுவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக, மத்திய அமைச்சர் திரு.சதானந்த கவுடா தெரிவித்தார்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்‍கலாம் என உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு தீர்ப்பளித்தது. இத்தீர்ப்பை அமல்படுத்த கேரளாவில் இடதுசாரி முன்னணி அரசு முயன்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. கேரளாவைச் சேர்ந்த 50 வயதுக்‍கும் குறைவான பெண்கள் இருவர் கோயிலுக்‍குள் நுழைந்ததை அடுத்து போராட்டம் நடைபெற்றது. சபரிமலை விவகாரத்தில் சீராய்வு மனுக்‍கள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில், கேரள மாநிலம் காசர்கோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சரும், பாரதிய ஜனதா மூத்த தலைவருமான திரு.சதானந்த கவுடா, சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்‍கை போன்று, சபரிமலை விவகாரத்திலும் சட்டம் இயற்றுவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாகத் தெரிவித்தார். இதை முன்னெடுத்துச் செல்ல உரிய நடவடிக்‍கைகள் எடுக்‍கப்படும் என்றும், உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்புக்‍காக காத்திருப்பதாகவும் திரு.சதானந்த கவுடா குறிப்பிட்டார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00