பிரதமர் மோடி, சீன அதிபரின் சந்திப்பு காரணமாக மாமல்லபுரத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுப்பு - பேருந்து நிலையத்திற்குள் அரசு பேருந்துகள் வரவும் தடை விதிப்பு - ஈ.சி.ஆர். சாலையில் பேருந்துகளை நிறுத்த தற்காலிக ஏற்பாடு

Oct 9 2019 3:29PM
எழுத்தின் அளவு: அ + அ -
பிரதமர் திரு. மோடி மற்றும் சீன அதிபர் வருகையையொட்டி, மாமல்லபுரத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மாமல்லபுரம் பேருந்து நிலையத்திற்குள் அரசு பேருந்துகள் வரவும் தடை விதிக்‍கப்பட்டுள்ளது.

பிரதமர் திரு. நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று, சீன அதிபர் ஜி ஜின்பிங், வரும் 11ம் தேதி இந்தியா வருகிறார். இரு தலைவர்களும், மாமல்லபுரத்தில் சந்தித்து முக்‍கிய பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.

மோடி - ஜின்பிங் சந்திப்பு உலகளவில் மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ள நிலையில், மாமல்லபுரம் கடந்த ஒரு மாதங்களாகப் பாதுகாப்பு வலையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. மாமல்லபுரத்தில், பல நாட்களாக மேற்கொள்ளப்படாமல் இருந்த அடிப்படை கட்டமைப்புகள், தலைவர்களின் வருகையையொட்டி விரைந்து நடைபெற்று வருகின்றன.

இதனிடையே, மாமல்லபுரத்திற்கு சுற்றுலாப் பயணிகள் வருகைக்‍கு தொல்லியல் துறை தடை விதித்துள்ளது. மாமல்லபுரம் பேருந்து நிலையத்திற்குள் அரசு பேருந்துகள் வரவும் தடை விதிக்‍கப்பட்டுள்ளது. ஈ.சி.ஆர். சாலையில் பூஞ்சேரி என்ற இடத்தில் பேருந்துகளை நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் மாமல்லபுரத்தில் உள்ள தங்கும் விடுதிகளில், போலீசார், தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். விமான நிலைய பாதுகாப்பு மற்றும் வசதிகள் குறித்து, சீனாவில் இருந்து வந்துள்ள உயர்மட்ட அதிகாரிகள் குழு ஆய்வு செய்து கண்காணித்து வருகிறது.இந்தியா-சீனா உச்சிமாநாடு நிகழ்ச்சிகள்

பிரதமர் திரு. நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு தொடர்பான விபரங்களை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

சீன அதிபர் ஜி ஜின்பிங் இரண்டு நாள் பயணமாக வரும் 11-ம் தேதி இந்தியா வருகிறார். வரலாற்று சிறப்பு மிக்‍க மாமல்லபுரத்தில் பிரதமர் திரு. மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு நடைபெற உள்ள நிலையில் இரு தலைவர்கள் பயணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. பிரதமரின் அழைப்பின்பேரில் இந்தியா- சீனா நாடுகளுக்‍கிடையிலான அதிகாரப்பூர்வ உச்சி மாநாட்டில் பங்கேற்க சீன அதிபர் ஜி ஜின்பிங், இந்தியா வருவதாகவும் 11, 12 தேதிகளில் அவரது பயணம் இருக்‍கும் என்றும் தெரிவிக்‍கப்பட்டுள்ளது. கடற்கரை நகரமான மாமல்லபுரத்தில் இந்த சந்திப்பு நடைபெறும் என்றும் உச்சிமாநாட்டின் போது இந்தியா-சீனா இடையிலான நட்புறவை மேம்படுத்துவது தொடர்பான பேச்சுவார்த்தைகளை இருநாடுகளும் மேற்கொள்ளும் என்றும் இந்திய வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பில் தெரிவிக்‍கப்ட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00