காஷ்மீர் விவகாரம் தொடர்பான சீனாவின் நிலைபாட்டில் திடீர் மாற்றம் - இந்தியாவும், பாகிஸ்தானும் பேசி தீர்த்துக்‍கொள்ள வேண்டும் என சீனா யோசனை

Oct 9 2019 4:43PM
எழுத்தின் அளவு: அ + அ -
காஷ்மீர் விவாகரத்தில், இந்தியாவும், பாகிஸ்தானும் பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காணவேண்டும் என சீனா தெரிவித்துள்ளது. அதிபர் ஷி ஜின்பிங் இந்தியா வரவுஉள்ள நிலையில், காஷ்மீர் பிரச்சனையில் தனது நிலைப்பாட்டை சீனா திடீரென மாற்றிக்கொண்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி, ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்து லடாக்கை தனி யூனியன் பிரதேசமாக ஆக்கியதற்கு, சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும், ஐ.நா. சபையிலும் காஷ்மீர் விவகாரத்தில், பாகிஸ்தானுக்‍கு ஆதரவாகவே சீனா குரல் கொடுத்தது. எனினும், உலக நாடுகள் அனைத்தும் இந்தியாவுக்‍கு சாதகமாகவே இருந்தன.

இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் சீனா சென்றுள்ள நிலையில், காஷ்மீர் விவகாரத்தில் இருந்து திடீரென சீனா பின்வாங்கியுள்ளது. இதுகுறித்து சீனா வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜெங் ஷுவாங் செய்தியாளர்களை சந்தித்தபோது, காஷ்மீர் விஷயத்தில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் ஒப்பந்தப்படியே இந்தியாவும், பாகிஸ்தானும் பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார். காஷ்மீர் விவகாரத்தில், உலக நாடுகளின் ஒருமித்த பார்வையின்படி, பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காணவேண்டும் என்றும், மூன்றாவது நபர் இதில் தலையிடக்‍கூடாது என்றும் கூறிய அவர், அதுவே சீனாவின் நிலைப்பாடு என்று தெரிவித்தார்.

சீனா அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் வரும் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் மாமல்லபுரத்தில் சந்திக்க உள்ளார்கள். இரு நாடுகளுக்கு இடையே வர்த்தக, ராஜாங்க ரீதியான உறவுகள் தொடர்பாக முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்புள்ளது. இதனையொட்டியே காஷ்மீர் விவகாரத்தில் சீனா திடீரென பின்வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00