உலக பொருளாதார மந்த நிலையின் தாக்‍கம் இந்தியாவில் கடுமையாக இருக்‍கும் - சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்‍கை

Oct 9 2019 6:23PM
எழுத்தின் அளவு: அ + அ -
நடப்பாண்டில் உலக பொருளாதாரம் மந்த நிலையை சந்திக்கும் என்பதால், அதன் தாக்கம் இந்தியாவில் மிக கடுமையாக இருக்கும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டலினா ஜார்ஜிவா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்காவின், வாஷிங்டனில் உள்ள சர்வதேச நாணய நிதியத்தின் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய, அதன் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டலினா ஜார்ஜிவா, ஒருங்கிணைந்த மந்த நிலையை, உலகப் பொருளாதாரம் தற்போது சந்தித்து வருகிறது என்றும், நடப்பு 2019 - 20 ஆம் ஆண்டில், 90 சதவீத நாடுகள் பொருளாதார மந்த நிலையை சந்திக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.

தற்போதைய மந்த நிலைக்கு பிரெக்சிட் மற்றும் அமெரிக்கா - சீனா இடையேயான வர்த்தகப் போர் ஆகியவை தான் காரணம் என்றும், உலக அளவில், பொருளாதார வளர்ச்சி விகிதமானது, கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறையப் போகிறது என்றும், அவர் தெரிவித்துள்ளார்.

பிரேசில், இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில், நடப்பாண்டில் பொருளாதார மந்த நிலை மிக கடுமையாக இருக்கும் என்றும், மந்த நிலையைத் தவிர்க்க வேண்டும் என்றால், உலக நாடுகள் ஒன்று சேர்ந்து வர்த்தக திறனைப் பெருக்க வேண்டும் என்றும், சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டலினா ஜார்ஜிவா கூறினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00