மத்திய அரசு எனக்கு பத்ம விபூஷன் விருதை ஏன் வழங்கியது? : தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் பேட்டி

Oct 9 2019 4:07PM
எழுத்தின் அளவு: அ + அ -
பாகிஸ்தான் மீது அதிக பற்றுடன் இருப்பதாகக் கூறும் மத்திய அரசு, தனக்கு ஏன் பத்ம விபூஷன் விருது வழங்கியது என, தேசியவாத காங்கிரஸ் தலைவர் திரு. சரத் பவார் கேள்வி எழுப்பி உள்ளார்.

அண்மையில், மஹாராஷ்டிர மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் திரு. நரேந்திர மோடி, இந்தியாவை விட பாகிஸ்தானை அதிகம் நேசிப்பதற்கான காரணத்தை, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரியப்படுத்த வேண்டும் எனக் கூறினார்.

இந்நிலையில், செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்த, தேசியவாத காங்கிரஸ் தலைவர் திரு. சரத் பவார், பாகிஸ்‌தான் மீது அதிக பற்றுடன் இருப்பதாகக் கூறும் மத்திய அரசு, தனக்கு ஏன், 2017 ஆம் ஆண்டு பத்ம விபூஷன் விருது வழங்கியது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

நாட்டின் நலனுக்கு சேவை ஆற்றியதாலேயே தனக்கு இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷன் வழங்கப்பட்டது என்றுக் குறிப்பிட்ட அவர், ஒரு கையில் விருதை கொடுத்து விட்டு மற்றொரு புறம் களங்கத்தை ஏற்படுத்துவது எந்த விதத்தில் நியாயம் என்றும் கேட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00