குஜராத் முதல் ஹரியானா வரை ஆயிரத்து 400 கிலோ மீட்டருக்‍கு பசுமை சுவர் - காடுகளை மீட்டெடுக்‍க மத்திய அரசு திட்டம்

Oct 9 2019 6:11PM
எழுத்தின் அளவு: அ + அ -
காடுகளை மீட்டெடுக்‍கும் நடவடிக்‍கையாக, குஜராத் மாநிலத்தின் போர்பந்தர் முதல் ஹரியானா மாநிலத்தின் பானிபட் வரை ஆயிரத்து 400 கிலோ மீட்டருக்‍கு பசுமை சுவர் எழுப்ப மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

பருவநிலை மாற்றம், பாலைவனமாதல் ஆகியவற்றை தடுக்க ஆப்ரிக்காவில், பசுமை சுவர் அமைக்கும் திட்டம் சில ஆண்டுகளுக்‍கு முன்பு தொடங்‍கப்பட்டது. இதில் பல நாடுகள் சம்பந்தப்பட்டுள்ளதால், திட்டம் நிறைவேறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், மனித நடவடிக்கைகளால் அழிக்கப்பட்ட காடுகளை மீட்டெடுக்‍கவும், காற்று மாசுபாட்டைக்‍ குறைக்‍கவும், பாலைவனமயமாக்கலை தடுக்‍கவும், குஜராத் மாநிலத்தின் போர்பந்தர் முதல் ஹரியானாவின் பானிபட் வரை பசுமைச் சுவர் அமைக்‍க மத்திய அரசு நடவடிக்‍கை எடுத்து வருகிறது. இதன்மூலம், 2030-ம் ஆண்டுக்குள் 26 மில்லியன் ஹெக்டேர் காடுகளை மீட்டெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

குஜராத், ராஜஸ்தான், ஹரியானா, டெல்லி இடையே ஆரவல்லி மலைத்தொடர் வழியாக ஆயிரத்து 400 கிலோமீட்டர் தூரத்துக்கும், 5 கிலோமீட்டர் அகலத்துக்கும் மரங்களை வளர்த்து பசுமைச்சுவர் அமைக்கப்படவுள்ளது. பசுமைச் சுவர் அமைக்கப்பட்டால் தார் பாலைவனத்தில் இருந்து பல்வேறு மாநிலங்களை தாக்கும் வெப்பக்காற்று தடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00