விபத்தை ஏற்படுத்தி உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது இந்திய தண்டனை சட்டத்தின் கீழும், வழக்குப்பதிவு செய்யலாம் - உச்சநீதிமன்றம் தீர்ப்பு

Oct 9 2019 4:36PM
எழுத்தின் அளவு: அ + அ -
சாலை விதிகளை மீறி வேகமாக வாகனத்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்துவதுடன், உயிரிழப்புக்கும் காரணமாக உள்ளவர்கள் மீது இந்திய தண்டனை சட்டத்தின் கீழும், வழக்குப்பதிவு செய்யலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சாலை விதிகளை மீறுவோர் மீது ஒரே சமயத்தில் மோட்டார் வாகன சட்டம், இந்திய தண்டனை சட்டம் ஆகிய இரு பிரிவிலும் வழக்கு தொடர முடியாது என்று கவுகாத்தி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இதனை எதிர்த்து அருணாசலப்பிரதேசம், திரிபுரா ஆகிய மாநிலங்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதிகள் இந்து மல்கோத்ரா, சஞ்சீவ் கன்னா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள், சாலை விதிகளை மீறுவோர் மீது, மோட்டார் வாகனச் சட்டம் மட்டுமின்றி இந்திய தண்டனை சட்டத்தின் கீழும் வழக்குப் பதிவு செய்யலாம் என உத்தரவிட்டனர்.

இதையடுத்து, முதல் முறையாக சாலை விதிகளை மீறுவோருக்கு மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் அதிகபட்சம் 6 மாதங்கள் மட்டுமே தண்டனை விதிக்க முடியும் என்ற நிலையில், இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் குற்றச்செயல் என்ற அடிப்படையில் 10 ஆண்டுகள் வரை தண்டனை விதிக்‍க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00