இந்தியாவுக்‍கு வருகை தரும் சீன அதிபர் ஜி ஜின்பிங், சென்னை விமான நிலையத்தில் இருந்து பாரம்பரிய 'செங்கொடி' பொருத்தப்பட்ட காரில் மாமல்லபுரம் செல்கிறார்

Oct 10 2019 1:02PM
எழுத்தின் அளவு: அ + அ -
பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும், நாளைமுதல் இரண்டு நாட்கள், மாமல்லபுரத்தில் சந்தித்து பேச உள்ளனர். ஆசிய கண்டத்தின் வல்லரசாக திகழும் சீனாவின் அதிபர், இந்தியா வருவதை உலக நாடுகள், பல்வேறு கோணங்களில் உற்று நோக்கிய வண்ணம் உள்ளன. இந்தியா வரும் சீன அதிபர், அந்த நாட்டின் பாரம்பரியமான, 'செங்கொடி' பொருத்தப்பட்ட வாகனத்தில், பயணிக்க திட்டமிடப்பட்டுள்ளது. சீனாவின் கம்யூனிசத்தை வெளிப்படுத்தும் வகையில், செங்கொடி என அர்த்தம் தரும், 'ஹாங்கி' என்ற சீனப் பெயரில் இந்த கார் தயாரிக்‍கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த சோவியத் ரஷ்யாவை சேர்ந்த, தொழில்நுட்ப வல்லுனர்களுடன் இணைந்து, 'சீனாவின் First Automobile Works என்ற நிறுவனம் 1950ல், இந்தக்‍ காரை வடிவமைத்தது. நாட்டின் அதிபர் மற்றும் முக்கிய தலைவர்கள் மட்டும் பயன்படுத்துவதற்காக, பழைய பாரம்பரிய கார் வடிவத்தை மாற்றாமல், அதேநேரம் நவீன பாதுகாப்பு அம்சங்களுடனும், குண்டு துளைக்காத உலோகங்கள், கண்ணாடிகளாலும், ஹாங்கி கார் தயாரிக்கப்பட்டுள்ளது. சீன அதிபர் ஜி ஜின்பிங், தனது அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளில் இந்தக்‍ காரையே பயன்படுத்துகிறார். மேலும், சீன ராணுவ அணிவகுப்பையும், இந்த காரில் சென்று பார்வையிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். 18 அடி நீளம், 6.5 அடி அகலம், 5 அடி உயரமும், 3,152 கிலோ எடையும் கொண்ட இந்த காரில், சீனாவின் கம்யூனிச ஆட்சியை பறைசாற்றும் செங்கொடியும் பறக்கவிடப்பட்டுள்ளது. இந்த பாரம்பரியமான காரிலேயே இந்தியாவிலும் அதிபர் ஜி ஜின்பிங் வலம் வர உள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00