காஷ்மீரில், 70 நாட்களுக்குப் பிறகு, இன்றுமுதல் தொலைபேசி சேவை வழங்கப்படும் - இணையதள சேவைக்கான தடை நீட்டிப்பு

Oct 13 2019 2:34PM
எழுத்தின் அளவு: அ + அ -
காஷ்மீரில், 70 நாட்களுக்குப் பிறகு, இன்று நள்ளிரவு முதல் தொலைபேசி சேவை வழங்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

காஷ்மீரின் சிறப்பு சட்டப்பிரிவு, கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி ரத்து செய்யப்பட்டதையடுத்து தொலைபேசி, இணைய சேவைகளுக்கு அங்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பின்னர் இயல்பு நிலை திரும்ப தொடங்கியதால், படிப்படியாக சேவைகள்​வழங்கப்பட்டு வருகின்றன. சுற்றுலாப் பயணிகளுக்கான கட்டுப்பாடுகள் சில நாட்களுக்கு முன்பு தளர்த்தப்பட்ட போது, தொலைபேசி இல்லாமல் சுற்றுலாப் பயணிகள் காஷ்மீருக்கு வருவது, சிரமத்தை ஏற்படுத்தியுள்ளதாக எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. இந்நிலையில் ஜம்மு காஷ்மீரின் 10 மாவட்டங்களிலும், போஸ்ட் பெய்டு தொலைபேசி சேவை இன்று நள்ளிரவு முதல் மீண்டும் தொடங்கப்பட உள்ளது. அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் அனுமதிக்கப்படும் என்றும், இணையதள சேவைக்‍கான தடை நீடித்திருக்‍கும் என்றும் தெரிவிக்‍கப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3705.00 RS. 4041.00
மும்பை Rs. 3790.00 Rs. 3890.00
டெல்லி Rs. 3785.00 Rs. 3905.00
கொல்கத்தா Rs. 3815.00 Rs. 3955.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.60 Rs. 50000.00
மும்பை Rs. 50.60 Rs. 50000.00
டெல்லி Rs. 50.60 Rs. 50000.00
கொல்கத்தா Rs. 50.60 Rs. 50000.00