தெலங்கானாவில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு எதிர்க்‍கட்சிகள் ஆதரவு - வரும் 19-ம் தேதி மாநிலம் தழுவிய வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு

Oct 13 2019 3:26PM
எழுத்தின் அளவு: அ + அ -
தெலங்கானாவில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு ஆதரவாக, வரும் 19-ம் தேதி மாநிலம் தழுவிய வேலைநிறுத்தத்திற்கு எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன.

சம்பள உயர்வு, பல்வேறு வரிகளில் இருந்து விலக்கு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, போக்குவரத்து கழக ஊழியர்கள், கடந்த 4-ம் தேதி இரவு முதல் 8 நாள்களாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ஹைதராபாத்தில் நடைபெற்ற பா.ஜ.க, காங்கிரஸ், தெலுங்கு தேசம், தெலங்கானா ஜன சமிதி கட்சி தலைவர்களின் கூட்டத்தில், போக்‍குவரத்து ஊழியர்களுக்‍கு ஆதரவாக, வரும் 19-ம் தேதி மாநிலம் தழுவிய அளவில் வேலைநிறுத்தத்தில் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

அதேநேரத்தில் போக்குவரத்து கழக ஊழியர்கள் போராட்டத்தை, இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கும்படி காவல்துறைக்கு முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் உத்தரவிட்டுள்ளார். கல்வி நிறுவனங்களுக்கு தசராவையொட்டி விடப்பட்ட விடுமுறை, 19-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3705.00 RS. 4041.00
மும்பை Rs. 3790.00 Rs. 3890.00
டெல்லி Rs. 3785.00 Rs. 3905.00
கொல்கத்தா Rs. 3815.00 Rs. 3955.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.60 Rs. 50000.00
மும்பை Rs. 50.60 Rs. 50000.00
டெல்லி Rs. 50.60 Rs. 50000.00
கொல்கத்தா Rs. 50.60 Rs. 50000.00