அனல் பறக்கும் மஹாராஷ்ட்ர சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரம் - பிரதமர் மோடி, ராகுல்காந்தி உள்ளிட்டோர் தேர்தல் பிரச்சாரம்

Oct 13 2019 3:58PM
எழுத்தின் அளவு: அ + அ -
மஹாராஷ்ட்ர மாநில சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, பிரதமர் திரு. நரேந்திரமோடியும், காங்கிரசின் திரு. ராகுல்காந்தியும், அந்த மாநிலத்தில் இன்று தேர்தல் பிரச்சாரக்‍ கூட்டங்களில் உரையாற்றுகின்றனர்.

288 தொகுதிகளைக்‍ கொண்டுள்ள மஹாராஷ்ட்ர சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 21-ம் தேதி ஒரேகட்டமாக நடைபெறுகிறது. ஆளும் பாரதிய ஜனதா கட்சி 150 இடங்களிலும், அதன் கூட்டணிக்‍ கட்சியான 124 இடங்களிலும் பிற கூட்டணிக்‍ கட்சி வேட்பாளர்கள், பாரதிய ஜனதாவின் தாமரை சின்னத்தில் 14 இடங்களிலும் போட்டியிடுகின்றனர். காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி 125 தொகுதிகளில் போட்டியிடுகிறது. நாடாளுமன்ற மக்‍களவைத் தேர்தலில், அதிக இடங்களில் வெற்றிபெறும் கட்சிதான், மஹாராஷ்ட்ர சட்டப்பேரவைத் தேர்தலிலும் அதிக இடங்களைக்‍ கைப்பற்றி ஆட்சி அமைத்து வருவது அந்த மாநிலத்தில் தொடர் நிகழ்வாக உள்ளது. நடைபெற்று முடிந்த மக்‍களவைத் தேர்தலிலும் பா.ஜ.க. 23 இடங்களிலும், சிவசேனா 18 இடங்களிலும் வெற்றிபெற்றன.

இந்நிலையில், பாரதிய ஜனதா-சிவசேனா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, பிரதமர் திரு. நரேந்திரமோடி இன்று Jalgaon, Sakoli ஆகிய 2 இடங்களில் தேர்தல் பிரச்சாரக்‍ கூட்டங்களில் உரையாற்றுகிறார். இதேபோல் காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களுக்‍கு ஆதரவாக தாராவி, லாட்டூர், விதர்பா, ஆகிய இடங்களில் திரு.ராகுல்காந்தி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3705.00 RS. 4041.00
மும்பை Rs. 3790.00 Rs. 3890.00
டெல்லி Rs. 3785.00 Rs. 3905.00
கொல்கத்தா Rs. 3815.00 Rs. 3955.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.60 Rs. 50000.00
மும்பை Rs. 50.60 Rs. 50000.00
டெல்லி Rs. 50.60 Rs. 50000.00
கொல்கத்தா Rs. 50.60 Rs. 50000.00