வரும் ஜனவரி மாதம், புதிய ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வெளியாக உள்ளதாக தகவல் - 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்‍கு மாற்றாக கொண்டுவர மத்திய அரசு நடவடிக்‍கை

Oct 16 2019 3:05PM
எழுத்தின் அளவு: அ + அ -
2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சடிக்‍கும் பணியை ரிசர்வ் வங்கி நிறுத்தியுள்ள நிலையில், வரும் ஜனவரி மாதம், புதிய ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது.

கருப்புப்பண ஒழிப்பு மற்றும் கள்ளநோட்டு ஒழிப்பு நடவடிக்‍கையாக, கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் மாதம், உயர்மதிப்பு ரூபாய் நோட்டுகளான 500, ஆயிரம் ஆகியவை பணமதிப்பிழப்பு செய்யப்பட்டன. பின்னர், புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டது.

இதுவரை அச்சிடப்பட்டு, புழக்கத்தில் விடப்பட்ட 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த ரிசர்வ் வங்கி, டிஜிட்டல் பண பரிவர்த்தனையை ஊக்குவிப்பதற்காகவும், ஊழலை தடுப்பதற்காகவும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பது நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தது.

இந்நிலையில், 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கு பதிலாக, வரும் ஜனவரி மாதம், புதிய ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வெளியாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்‍கின்றன. மற்றொருபுறம், 100, 200, 500 ஆகிய ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருக்கும் என்றும் தகவல் வெளியாகிவுள்ளது. எனினும், ரிசர்வ் வங்கி தரப்பில் இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00