ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை மேலும் 7 நாட்கள் காவலில் விசாரிக்‍கலாம் - அமலாக்‍கத் துறைக்‍கு டெல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி

Oct 17 2019 8:23PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் திஹார் சிறையில் அடைக்‍கப்பட்டுள்ள ப.சிதம்பரத்தை மேலும் 7 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்‍க அமலாக்‍கத்துறைக்‍கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

ஐ.என்.எக்ஸ் மீடியாவுக்கு சுமார் 305 கோடி ரூபாய் அந்நிய முதலீட்டிற்கு முறைகேடாக அனுமதி வழங்கியது தொடர்பான வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் திரு.ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைது செய்து கொள்ள அனுமதி வழங்கி சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. திரு.ப. சிதம்பரத்தை அமலாக்கத்துறை டெல்லி திகார் சிறையில் நேற்று கைது செய்தது. இதையடுத்து, டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் திரு. ப. சிதம்பரம் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டுமென அமலாக்கத்துறை சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது, அதேபோல், சிபிஐ வழக்கில் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிதம்பரத்தின் நீதிமன்ற காவலையும் மேலும் 14 நாட்களுக்கு நீட்டிக்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து இவ்வழக்‍கில் உத்தரவு பிறப்பித்த நீதிபதி அஜய்குமார், திரு.ப.சிதம்பரத்தை வரும் 24-ம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அனுமதி வழங்கினார். மேலும், சிதம்பரத்தின் நீதிமன்ற காவலையும் 7 நாட்களுக்கு நீட்டிப்பதாக நீதிபதி அறிவித்தார்.

இதனிடையே, தனக்கு வீட்டு உணவு மற்றும் ஏ.சி உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்பட வேண்டுமென திரு.ப. சிதம்பரத்தின் சார்பில் நீதிபதியிடம் முறையிடப்பட்டது. வீட்டு உணவு உள்ளிட்ட வசதிகளுக்கு அனுமதி வழங்கிய நீதிபதி, ஏசி வசதி செய்து தரப்படவேண்டும் என்ற சிதம்பரத்தின் கோரிக்கையை நிராகரித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3705.00 RS. 4041.00
மும்பை Rs. 3790.00 Rs. 3890.00
டெல்லி Rs. 3785.00 Rs. 3905.00
கொல்கத்தா Rs. 3815.00 Rs. 3955.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.60 Rs. 50000.00
மும்பை Rs. 50.60 Rs. 50000.00
டெல்லி Rs. 50.60 Rs. 50000.00
கொல்கத்தா Rs. 50.60 Rs. 50000.00