நாட்டில் கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்‍கு, அதிவேகமாக நுகரும், நுகர்வோர் பொருட்களின் கிராமப்புற விற்பனை குறைவு - ஆய்வில் தகவல்

Oct 18 2019 1:32PM
எழுத்தின் அளவு: அ + அ -
இந்தியாவில் கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்‍கு, அதிவேகமாக நுகரும் நுகர்வோர் பொருட்களின் கிராமப்புற விற்பனை குறைந்துள்ளது ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.

இந்தியாவில் தொழில்துறைகள் மந்த நிலையை எதிர்கொண்டுள்ள நிலையில், நுகர்வு பொருட்களின் துறையிலும் மந்தநிலை உருவாகியுள்ளது ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல ஆய்வு நிறுவனமான Nielsen, ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலாண்டு நுகர்வு தொடர்பாக ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வின் அறிக்கை அண்மையில் வெளியிடப்பட்டது. குளிர்பானம், பதப்படுத்தப்பட்ட உணவுகள், மலிவுவிலை மிட்டாய்கள் போன்றவை அதிவேகமாக நுகரும் நுகர்வோர் பொருட்களாக கருதப்படுகின்றன. இவற்றின் நுகர்வு கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவு கிராமப்புறங்களில் குறைந்துள்ளது Nielsen ஆய்வு அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. கடந்த 2018ம் ஆண்டில் 20 சதவீதமாக இருந்த இந்த நுகர்வு வளர்ச்சி விகிதம், இந்த ஆண்டு வெறும் 5 சதவீதமாக வீழ்ச்சி வளர்ச்சி கண்டுள்ளது. அதிவேகமாக நுகரும் நுகர்வோர் பொருட்கள் விற்பனையில் ஒட்டுமொத்த வளர்ச்சியில் 36 சதவீதம், கிராமப்புறங்களை நம்பியே உள்ளது. விலை குறைவான பொருட்கள் கிராமப்புற சந்தைகளில் அதிகம் விற்பனையாகும். கிராமப்புற சந்தைகளில் ஏற்பட்டுள்ள விற்பனை வீழ்ச்சியால், அதிவேக நுகர்வு பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00