அதிகப்படியான தள்ளுபடியில் பொருட்களை விற்பனை செய்த ஆன்லைன் நிறுவனங்கள்: விதிகள் மீறப்பட்டதா என்பது குறித்து விசாரணை

Oct 18 2019 1:53PM
எழுத்தின் அளவு: அ + அ -
அதிகப்படியான தள்ளுபடி விலையில் பொருட்களை ஆன்லைன் நிறுவனங்கள் விற்பனை செய்தது தொடர்பாக, ஆய்வு செய்யப்படும் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

பண்டிகை காலத்தை முன்னிட்டு பிரபல ஆன்லைன் நிறுவனங்கள் அதிகப்படியான தள்ளுபடியில் பொருட்களை விற்பனை செய்தன. இதன் மூலம் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பில் வர்த்தகம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சில்லரை வியாபாரிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் விதத்தில் அந்நிய முதலீட்டு விதிகளை மீறி இந்த நிறுவனங்கள் விற்பனையில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் திரு. பியூஷ் கோயல், ஆன்லைன் நிறுவனங்கள் அதிகப்படியான தள்ளுபடியில் பொருட்களை விற்பனை செய்தது தொடர்பாக புகார்கள் வந்திருப்பதாக தெரிவித்தார். பொருட்களை ஆன்லைன் நிறுவனங்கள் தள்ளுபடி விலையில் விற்பனை செய்ய அனுமதி இல்லை என்றும், அதன் மூலம் சில்லரை வியாபாரிகளுக்கு நஷ்டம் ஏற்படுத்துவதை அனுமதிக்க முடியாது என்றும் அவர் கூறினார். இந்த விவகாரம் தொடர்பாக ஆன்லைன் நிறுவனங்களிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாக தெரிவித்த திரு. பியூஷ் கோயல், விதிமுறை மீறலில் ஈடுபட்டது தெரியவந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00