ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 62 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த சட்ட மேலவை கலைப்பு - மாநில நிர்வாகம் உத்தரவு

Oct 18 2019 1:48PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 62 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த சட்ட மேலவையைக் கலைத்து மாநில நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீரில் 1957-ம் ஆண்டு முதல் சட்ட பேரவை மற்றும் சட்ட மேலவை செயல்பட்டு வந்தது. கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசு பிரித்தது. மேலும், லடாக் பகுதி, சட்டசபை இல்லாத யூனியன் பிரதேசமாகவும், ஜம்மு-காஷ்மீர், சட்டசபையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மறுசீரமைப்பு சட்டம் விதி 54-ன் படி, ஜம்மு-காஷ்மீரில் 62 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த சட்ட மேலவையை கலைப்பதற்கான உத்தரவை பொது நிர்வாகத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, சட்ட மேலவையில் பணியாற்றிவந்த 116 ஊழியர்களும், வரும் 22-ம் தேதியில் இருந்து தங்கள் வருகையை பொது நிர்வாகத் துறையிடம் பதிவு செய்ய வேண்டும் என்றும், ஜம்மு-காஷ்மீர் மேலவை செயலாளர், தனது கட்டுப்பாட்டில் உள்ள சட்டம் ஒழுங்கு, வணிகம், சட்டசபை விவகாரங்கள் தொடர்பான ஆவணங்கள் அனைத்தையும் சட்டசபை செயலகத்திடம் ஒப்படைக்கவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00