ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பான வழக்கு - ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் மீது, சி.பி.ஐ.யின் குற்றப்பத்திரிக்‍கை அடிப்படையில் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை

Oct 21 2019 4:10PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் மீது, சி.பி.ஐ. தாக்‍கல் செய்த குற்றப்பத்திரிக்‍கை மீது விசாரணை நடைபெற்று வருகிறது.

ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு, முறைகேடாக 305 கோடி ரூபாய் அந்நிய முதலீட்டிற்கு அனுமதி வழங்கிய விவகாரத்தில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் சி.பி.ஐ.யால் கடந்த ஆகஸ்டு 21-ம் தேதி கைது செய்யப்பட்டார்.

சி.பி.ஐ. காவல் நிறைவடைந்த நிலையில், அவரை நீதிமன்ற காவலில், திஹார் சிறையில் அடைக்க டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் கடந்த மாதம் 5-ம் தேதி உத்தரவிட்டது. அவரது நீதிமன்றக்‍காவல், வரும் 24ம் தேதி வரை நீட்டிக்‍கப்பட்டுள்ளது.

திஹார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்திடம் நேற்றுமுன்தினம் விசாரணை நடத்திய அமலாக்‍கத்துறை, பின்னர் அவரை கைது செய்தது. இதையடுத்து, 24ம் தேதிவரை, சிதம்பரத்தை காவலில் வைத்து விசாரிக்‍க அமலாக்‍கத்துறைக்‍கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இந்நிலையில், ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட 14 பேர் மீது, டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில், சி.பி.ஐ. சார்பில் குற்றப்பத்திரிக்‍கை தாக்‍கல் செய்யப்பட்டுள்ளது. குற்றப்பத்திரிக்‍கை மீதான விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3705.00 RS. 4041.00
மும்பை Rs. 3790.00 Rs. 3890.00
டெல்லி Rs. 3785.00 Rs. 3905.00
கொல்கத்தா Rs. 3815.00 Rs. 3955.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.60 Rs. 50000.00
மும்பை Rs. 50.60 Rs. 50000.00
டெல்லி Rs. 50.60 Rs. 50000.00
கொல்கத்தா Rs. 50.60 Rs. 50000.00