மும்பை ஆரே காலனியில் மரங்களை வெட்ட மட்டுமே தடையே தவிர கட்டுமானப் பணிகளுக்கு எந்தவித தடையும் இல்லை - உச்சநீதிமன்றம் விளக்கம்

Oct 21 2019 6:11PM
எழுத்தின் அளவு: அ + அ -
மும்பை ஆரே காலனி பகுதியில், மெட்ரோ ரயில் பணிகளுக்காக மரங்களை வெட்டுவதற்குத்தான் தடை விதிக்கப்பட்டதே தவிர, கட்டுமானப் பணிகளுக்கு எந்தவித தடையும் விதிக்கப்படவில்லை என உச்சநீதிமன்றம் விளக்கமளித்துள்ளது.

மும்பை ஆரே காலனி பகுதியில் மெட்ரோ ரயில் திட்டத்திற்காக அங்குள்ள மரங்களை, வெட்டுவதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், இவ்விவகாரத்தை தானாக முன் வந்து விசாரித்த உச்சநீதிமன்றம், அங்கு மரங்களை வெட்ட தடை விதித்தது. இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகள் அருண் மிஸ்ரா, தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு, வெட்டப்பட்ட மரங்களுக்கு பதிலாக புதிதாக நடப்பட்ட மரக்கன்றுகள் குறித்தும், மரங்களை வெட்டாமல் வேரோடு இடம் மாற்றியதற்கும், வெட்டப்பட்ட மரங்கள் குறித்தும் புகைப்படங்களோடு கூடிய அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. மேலும், மெட்ரோ ரயில் பணிகளுக்காக மரங்களை வெட்டுவதற்குத்தான் தடை விதிக்கப்பட்டதே தவிர, கட்டுமானப் பணிகளுக்கு எந்தவித தடையும் விதிக்கப்படவில்லை என நீதிபதிகள் விளக்கமளித்து, விசாரணையை நவம்பர் மாதத்திற்கு ஒத்தி வைத்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3705.00 RS. 4041.00
மும்பை Rs. 3790.00 Rs. 3890.00
டெல்லி Rs. 3785.00 Rs. 3905.00
கொல்கத்தா Rs. 3815.00 Rs. 3955.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.60 Rs. 50000.00
மும்பை Rs. 50.60 Rs. 50000.00
டெல்லி Rs. 50.60 Rs. 50000.00
கொல்கத்தா Rs. 50.60 Rs. 50000.00