மகாராஷ்டிராவில் பாரதிய ஜனதா - சிவசேனா கூட்டணி அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடிக்‍கும் - அரியானாவில் பாஜக ஆட்சியை தக்‍க வைத்துக்‍கொள்ளும் என தேர்தலுக்‍குப் பிந்தைய கருத்துகணிப்புகள் தகவல்

Oct 22 2019 11:02AM
எழுத்தின் அளவு: அ + அ -
மகாராஷ்டிராவில் பாரதிய ஜனதா - சிவசேனா கூட்டணி அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடிக்‍கும் என்றும், ஹரியானாவில் பாரதிய ஜனதா ஆட்சியை தக்‍க வைத்துக்‍கொள்ளும் எனவும், தேர்தலுக்‍குப் பிந்தைய கருத்துகணிப்புகள் வெளியாகியுள்ளன.

ஆக்ஸிஸ் மை இந்தியா - இந்தியா டுடே இணைந்து நடத்திய கருத்து கணிப்பில், மஹாராஷ்டிராவில் பா.ஜ.க, - சிவசேனா கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் பா.ஜ.க 166 முதல் - 194 தொகுதிகளையும், காங்கிரஸ் 72 முதல் 90 தொகுதிகளையும் கைப்பற்றும் என கூறப்பட்டுள்ளது. அரியானாவில் மீண்டும் பா.ஜ.க,வே ஆட்சியை பிடிக்க இருப்பதாகவும் இந்தியா டுடே தெரிவித்துள்ளது.

டைம்ஸ் நவ் கணிப்பு நடத்திய கணிப்பில், மஹாராஷ்டிராவில் பா.ஜ.க -230 தொகுதிகளிலும் காங்கிரஸ் 48 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என தெரிவிக்‍கப்பட்டுள்ளது.

ஹரியானாவில் பா.ஜ.க. 71 தொகுதிகளிலும் காங்கிரஸ் 11 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என கூறியுள்ளது.

இதேபோல், நியூஸ்எக்ஸ் நடத்திய கணிப்பில் மஹாராஷ்டிராவில் பா.ஜ.க, 144 லிருந்து 150 தொகுதிகளிலும், சிவசேனா 44 லிருந்து 50 தொகுதிகளிலும், காங்கிரஸ் 40 லிருந்து 50 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என தெரிவித்துள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00