INX மீடியா ஊழல் வழக்‍கு - ஜாமீன் கோரி முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தொடர்ந்த மனு மீது உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு

Oct 22 2019 10:41AM
எழுத்தின் அளவு: அ + அ -
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் மீது சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளதையடுத்து ஜாமீன் மனு மீதான தீர்ப்பு காலை 10.30 மணிக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

சிபிஐ தொடர்ந்த வழக்கில், கடந்த ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதி கைது செய்யப்பட்ட ப.சிதம்பரம், டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதே வழக்கில் சட்டவிரோத பணப்பறிமாற்றம் நடைபெற்றதாக கூறி, ப.சிதம்பரத்தை, சிறையில் வைத்தே, அமலாக்கத்துறையும் கைது செய்திருக்கிறது.

இந்நிலையில், டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில், ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்திக் சிதம்பரம் உள்ளிட்ட 14 பேர் மீது 2 ஆயிரம் பக்க குற்றப்பத்திரிக்கையைத் சிபிஐ தாக்கல் செய்திருந்தது.

இதனை ஏற்றுக் கொண்டிருக்கும் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம், வருகிற 24ஆம் தேதி, ப.சிதம்பரத்தை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு, சிபிஐக்கு உத்தரவிட்டிருக்கிறது.

இதற்கிடையே, தன்னை பிணையில் விடுவிக்க கோரி, ப.சிதம்பரம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கும் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு இன்று காலை 10.30 மணிக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3705.00 RS. 4041.00
மும்பை Rs. 3790.00 Rs. 3890.00
டெல்லி Rs. 3785.00 Rs. 3905.00
கொல்கத்தா Rs. 3815.00 Rs. 3955.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.60 Rs. 50000.00
மும்பை Rs. 50.60 Rs. 50000.00
டெல்லி Rs. 50.60 Rs. 50000.00
கொல்கத்தா Rs. 50.60 Rs. 50000.00