2008 மும்பை தாக்குதல்போல மீண்டும் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை - கடல் வழிப்பாதைகள் கடற்படையின் தீவிர கண்காணிப்பில் உள்ளன : ராஜ்நாத் சிங்

Oct 22 2019 2:14PM
எழுத்தின் அளவு: அ + அ -
மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நடத்தப்பட்ட தீவிரவாத தாக்‍குதலைப்போல மீண்டும் ஒரு தாக்குதல் நடைபெறாமல் இருக்க, கடற்படை தகுந்த நடவடிக்கை எடுத்து வருவதாக மத்திய பாதுகாப்பு அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற கடற்படை தளபதிகள் மாநாட்டை, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், இந்தியா, தானாக எந்த நாட்டின் மீதும் தாக்‍குதல் நடத்தியதில்லை என்றும், பிற நாடுகளின் நிலப்பகுதிகளை அபகரித்தது இல்லை என்றும் தெரிவித்தார். ஆனால், நாட்டிற்கு எதிரான எந்தவொரு தீய செயலுக்‍கும் தக்‍க பதிலடி கொடுக்‍கும் வகையில், இந்திய பாதுகாப்பு துறை சக்தி வாய்ந்ததாக உள்ளதாக கூறினார். 2008 மும்பை தீவிரவாத தாக்குதல் போல மீண்டும் நடக்காமல் இருக்க இந்திய கடற்படை நடவடிக்கை எடுத்து வருவதாகவும், நாட்டின் அனைத்து கடல்பகுதிகளும், கடற்படையின் தீவிர கண்காணிப்பில் உள்ளதாகவும் திரு.ராஜ்நாத் சிங் குறிப்பிட்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3705.00 RS. 4041.00
மும்பை Rs. 3790.00 Rs. 3890.00
டெல்லி Rs. 3785.00 Rs. 3905.00
கொல்கத்தா Rs. 3815.00 Rs. 3955.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.60 Rs. 50000.00
மும்பை Rs. 50.60 Rs. 50000.00
டெல்லி Rs. 50.60 Rs. 50000.00
கொல்கத்தா Rs. 50.60 Rs. 50000.00