சமூக வலைதள கணக்குகளுடன் ஆதார் இணைப்பு தொடர்பான அனைத்து வழக்‍குகளும் உச்சநீதிமன்றத்திற்கு மாற்றம்

Oct 22 2019 6:11PM
எழுத்தின் அளவு: அ + அ -
நாடு முழுவதும் பல்வேறு உயர்நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்டு வரும் சமூக வலைத்தளம் தொடர்பான அனைத்து வழக்குகளும் உச்சநீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளன.

வாட்ஸ் ஆப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலமாக போலிச் செய்திகள் மற்றும் வதந்திகள் பரப்பப்படுவதை தடுக்‍க, அதனை அனுப்பும் நபர் குறித்த விவரங்களை தெரிவிக்கும்படி, அந்நிறுவனங்களிடம், போலீசார் கேட்டு வருகின்றனர். ஆனால், தனிநபர் ரகசியம் காக்கப்பட வேண்டும் என்பதற்காக அந்த விபரங்களை சமூக இணையதள நிறுவனங்கள் வழங்குவது இல்லை.

இந்த பிரச்னைக்கு தீர்வு காண, சமூக இணையதளங்களுடன் அவற்றை பயன்படுத்துவோரின் ஆதார் எண்களை இணைக்கக் கோரி தமிழகம் உள்ளிட்ட மாநில அரசுகள், சமூக இணையதள நிறுவனங்கள் மீது உயர்நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்தன. பல்வேறு உயர் நீதிமன்றங்களில் இந்த வழக்குகள் நிலுவையில் உள்ளதால், அனைத்து வழக்‍குகளையும் உச்சநீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி ஃபேஸ்புக் நிறுவனம் மனு செய்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்‍கல் செய்தன. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், சமூக வலைத்தளங்கள் தொடர்பாக பல்வேறு உயர்நீதிமன்றங்களில் நடைபெற்று வரும் அனைத்து வழக்குகளையும் உச்சநீதிமன்றமே விசாரிக்கும் என அறிவித்துள்ளது. மேலும், சமூக வலைதள கணக்குகளை நெறிமுறைபடுத்த மத்திய அரசுக்கு 3 மாத கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00